உணவே மருந்து
தண்டு கீரை கடையல்
தேவையானவை
- கீரை – 1 கட்டு
- பூண்டு பல் -10
- பச்சை மிளகாய் -3
- வெங்காயம் – 1 பெரியது
- மஞ்சள் தூள்
- நல்லெண்ணெய்
- கடுகு
- உளுந்தம்பருப்பு
- கறிவேப்பிலை
செய்முறை
கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து பிறகு நறுக்கி வைத்துக்கொள்ளவேண்டும். பின்பு கீரையை மஞ்சள் தூள், பூண்டு சேர்த்து வேகவைத்து கடைந்து வைத்துக்கொள்ளவேண்டும் . பிறகு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து அத்துடன் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியவுடன் கடைந்த கீரையை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.
பயன்கள்
- உடலுக்கு சக்தியை அளிப்பதுடன் உடலில் உள்ள தேவையற்றை கொழுப்பை நீக்குகிறது.
- மாரடைப்பு , உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய் பாதிப்புகளை வராமல் தடுக்கிறது.
- நோய் தொற்றுகள் வராமல் தடுக்கிறது.
- உடலை குளிர்ச்சியாக்கும்.
- மூல நோய் உள்ளவர்களுக்கு சிறந்த உணவாகும்.