உணவே மருந்து

தண்டு கீரை கடையல்

தேவையானவை

  • கீரை – 1 கட்டு
  • பூண்டு பல் -10
  • பச்சை மிளகாய் -3
  • வெங்காயம் – 1 பெரியது
  • மஞ்சள் தூள்
  • நல்லெண்ணெய்
  • கடுகு
  • உளுந்தம்பருப்பு
  • கறிவேப்பிலை

செய்முறை

கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து பிறகு நறுக்கி வைத்துக்கொள்ளவேண்டும். பின்பு கீரையை மஞ்சள் தூள், பூண்டு சேர்த்து வேகவைத்து கடைந்து வைத்துக்கொள்ளவேண்டும் . பிறகு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து அத்துடன் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியவுடன் கடைந்த கீரையை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.

பயன்கள்

  • உடலுக்கு சக்தியை அளிப்பதுடன் உடலில் உள்ள தேவையற்றை கொழுப்பை நீக்குகிறது.
  • மாரடைப்பு , உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய் பாதிப்புகளை வராமல் தடுக்கிறது.
  • நோய் தொற்றுகள் வராமல் தடுக்கிறது.
  • உடலை குளிர்ச்சியாக்கும்.
  • மூல நோய் உள்ளவர்களுக்கு சிறந்த உணவாகும்.

வீடியோ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 − 1 =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!