சித்த மருத்துவம்லேகியம்
வெண்பூசணி லேகியம்
வெண்பூசணி லேகியம் தினமும் 5 கிராம் அளவு சாப்பிட்டு வர இளைத்த உடம்பை தேற்றும்.
தேவையானவை
- பூசணிக்காய் – 3 கிலோ அளவு
- சர்க்கரை – 2 கிலோ
- சுக்கு – 40 கிராம்
- நெய் – 1/2 கிலோ
- மிளகு – 40 கிராம்
- திப்பிலி – 40 கிராம்
- கடுக்காய் – 40 கிராம்
- தான்றிக்காய் – 40 கிராம்
- நெல்லிவற்றல் – 40 கிராம்
- சீரகம் – 40 கிராம்
- கொத்தமல்லி – 40 கிராம்
- அதிமதுரம் – 40 கிராம்
- இலவங்கம் – 40 கிராம்
- இலவங்கபத்திரி – 40 கிராம்
- ஏலக்காய் – 40 கிராம்
செய்முறை
மேற்கண்ட மூலிகைகளை பொடியாக்கி வைத்துக்கொண்டு பூசணிக்காயை சதை பகுதியை மட்டும் வைத்துக்கொண்டு நெய்யில் வதக்கி பிறகு சர்க்கரை பாகு செய்து அதில் நெய்யில் வதக்கிய பூசணிக்காயை போட்டு கிளறி பிறகு 500 கிராம் அளவு நெய் சேர்த்து கையில் ஒட்டாத பதத்தில் இறக்கி வைத்துக்கொள்ளவும்.
சாப்பிடும் முறை
தினமும் காலை, மாலை 5 கிராம் அளவு சாப்பிடவும்.
வெண்பூசணி லேகியம் பயன்கள்
- எலும்புகள் பலமடையும்.
- உடல் சூடு தணியும்.
- இளைத்த உடல் தேற்றும்.
- பெண்களுக்கு எற்படும் நீர்கட்டிகள், வெள்ளை படுதல், சீரற்ற மாதவிலக்கு, அதிக இரத்தபோக்கு ஆகியவை குணமாகும்.