சித்த மருத்துவம்தைலம்
வாதமடக்கித் தைலம்
வாதமடக்கித் தைலம் முழங்கால், வாயுத்தொல்லை, நரம்புத்தளர்ச்சி மற்றும் முட்டி வீக்கம் ஆகியவற்றை குணமாக்கும் சிறந்த மூலிகை தைலமாகும்.
தேவையான மூலிகைகள்
- வாதநாராயணன் இலைச்சாறு – 1 லிட்டர்
- விளக்கெண்ணெய் – 1 லிட்டர்
- பூண்டு – 200 கிராம்
- சுக்கு – 40 கிராம்
- மிளகு – 40 கிராம்
- திப்பிலி – 40 கிராம்
- வெண்கடுகு – 10 கிராம்
செய்முறை மற்றும் சாப்பிடும் முறை
விளக்கெண்ணையை, வாதநாராயணன் இலைச்சாறு இரண்டையும் ஊற்றி அதில் பூண்டு, சுக்கு, மிளகு, திப்பிலி, வெண்கடுகு இவற்றை அரைத்து அதில் போட்டு பதமாக காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு ( வாதமடக்கித் தைலம் ) காலை வேளை மட்டும் 2 தேக்கரண்டி சாப்பிடவும்.
தீரும் நோய்கள்
வாத ரோக, கீல் வாயு, முடக்கு வாதம், நடுக்கு வாதம், நரம்புத்தளர்ச்சி, கை-கால் குடைச்சல் வலி, ழங்கால் முட்டி வீக்கம் ஆகிய நோய்கள் தீரும்.