சித்த மருத்துவம்லேகியம்
திரிபலா லேகியம்
திரிபலா லேகியம் இரத்தசோகைக்கு சிறந்ததாகும். காமாலை உடல் சோர்வை நீக்குகிறது.
தேவையானவை
- கடுக்காய்த் தோல் – 40 கிராம்
- தான்றிக்காய்த் தோல் – 40 கிராம்
- நெல்லிக்காய் வற்றல் – 40 கிராம்
- கடுகு ரோகினி – 30 கிராம்
- வாய்விளங்கம் – 30 கிராம்
- ரோசா மொட்டு – 20 கிராம்
- நில ஆவாரை – 20 கிராம்
- கிராம்பு – 10 கிராம்
- சோம்பு – 10 கிராம்
- மூக்கிரட்டை வேர் – 300 கிராம்
செய்முறை
அனைத்து மூலிகைகளையும் இடித்து பொடியாக்கி சலித்து வைத்துக்கொண்டு 500 கிராம் சர்க்கரை எடுத்து பாகு செய்து சலித்து வைத்துள்ள மூலிகை பொடிகளை சேர்த்து லேகிய பதத்துக்கு கிளறி வைத்துக்கொள்ளவும்.
சாப்பிடும் முறை
தினமும் காலை, மாலை 5 கிராம் அளவு எடுத்து தேன் அல்லது நெய் கலந்து சாப்பிடவும்.
பயன்கள்
- கை மற்றும் கால் வீக்கங்கள் குறையும்.
- இரத்தசோகை நீங்கும்.
- காமாலை நோய் குணமாகும்.