சித்த மருத்துவம்சூரணம்
தாளிசப்பத்திரி சூரணம்
தாளிசப்பத்திரி சூரணம் வாத நோய், பித்தநோய், சொறி, சிரங்கு, வயிற்று எரிச்சல், வயிற்றுவலி, நீர்ச்சுருக்கு, காமாலை,காய்ச்சல், வெள்ளை, கை கால் குடைச்சல், தொண்டைக் கட்டு, நீர்க்கடுப்பு, அஜீரணம் இவை அனைத்து பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகும்.
தேவையானவை
- தாளீசம் – 10 கிராம்
- இலவங்கப்பட்டை – 10 கிராம்
- இலவங்கப் பத்திரி -10 கிராம்
- ஏலக்காய் -10 கிராம்
- கிராம்பு -10 கிராம்
- தான்றிக்காய் -10 கிராம்
- நெல்லிவற்றல் -10 கிராம்
- சாதிக்காய் -10 கிராம்
- சாதிப்பத்திரி -10 கிராம்
- சுக்கு -10 கிராம்
- மிளகு -10 கிராம்
- திப்பிலி -10 கிராம்
- கடுக்காய் -10 கிராம்
- ஓமம் -10 கிராம்
- சதகுப்பை – 10 கிராம்
- கருஞ்சசீரகம் -10 கிராம்
- கண்டத்திப்பிலி -10 கிராம்
- சீரகம் – 10 கிராம்
- கற்கடசிங்கி – 10 கிராம்
- சிறுநாகப் பூ -10 கிராம்
- அதிமதுரம் -10 கிராம்
- கோஷ்டம் -10 கிராம்
- சடாமாஞ்சில் -10 கிராம்
- பெருங்காயம் -10 கிராம்
- தனியா -60 கிராம்
- சர்க்கரை -120 கிராம்
செய்முறை
இவை அனைத்தையும் இளவறுப்பாக வறுத்து பொடித்து சலித்து சர்க்கரை பொடியுடன் கலந்து வைத்துக்கொள்ளவும்.
சாப்பிடும் முறை
தாளிசப்பத்திரி சூரணம் பொடியை தேனுடன் 1 அல்லது 2 கிராம் காலை,மாலை என இருவேளை சாப்பிட்டு வரவும்.
பயன்கள்
- வாதநோய்கள், பித்தநோய்கள் குணமாகும்.
- நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு, வயிற்றுவலி குணமாகும்.
- குடல் சார்ந்த பிரச்சினைகள் தீரும்.
- அரிப்பு மற்றும் தோல்நோய்கள் குணமாகும்.