கரும்புச்சாறு மருத்துவ பயன்கள்
கரும்புச்சாறு இயற்கையாக கிடைக்கும் அற்புதமான பானம். நாம் இப்பொழுது இயற்கை பானங்களை விட கார்பனேட்டட் உள்ள பானங்களை அதிகளவு விரும்பி சாப்பிடுகிறோம். அது உடலுக்கு அதிக தீமை என்று தெரிந்தும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதை விரும்பி குடிக்கிறார்கள்.
உடலுக்கு மிகச்சிறந்த பானம்
கரும்புச்சாறு அடிக்கடி சாப்பிட்டுவந்தால் உடலில் உள்ள தீங்கு தரும் நச்சுக்களை நீங்கி உடலை தூய்மையாக இருக்க உதவுகிறது. நமக்கு வாய்ப்பு கிடைக்கும் போது கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.
ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ள கரும்புச்சாறு பருகுவதால் என்றும் இளைமையான தோற்றத்தை தருகிறது.புற்றுநோய்களை எதிர்த்து போராடுகிறது. உடல் உறுப்புகளுக்கு பலத்தை தருகிறது.
உடல் எடை குறைய
உடலில் உள்ள நச்சுக்களை இயக்கையாகவே நீக்குவதால் உங்கள் எடையை கட்டுக்குள் வைக்க வழிவகுக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
கரும்புச்சாற்றில் வைட்டமின், பாஸ்பரல், கால்சியம், மாங்கனீசு, துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
உடல் சோர்வு
அதிகளவு வேலைபளுவினால் உடல் சோர்வுற்று இருந்தால் கரும்புச்சாற்றை அருந்திப்பாருங்கள் அது சோர்வுற்ற உடலுக்கு உடனடியாக ஆற்றலை தருகிறது. மேலும் உங்கள மனநிலையை புத்துணர்ச்சியாக மாற்றும் தன்மை உடையது.உடல் இழந்த பலத்தை உடனடியாக பெறுகிறது.
வயிற்றுப்புண், தொண்டைப்புண் குணமாக
கரும்புச்சாற்றில் விட்டமின் சி அதிகமாக காணப்படுவதால் இது தொண்டைப்புண், வயிற்றுப்புண்களை குணமாக்குகிறது.
தொண்டையில் அரிப்பு, எரிச்சல் உள்ளது போல் உணர்ந்தால் கரும்புச்சாற்றை சாப்பிடலாம். இது வைரஸ் மற்றும் பாக்டீரியா நோய் தொற்றுக்களை தடுக்கக்கூடியது.
பற்களுக்கு வலிமை தருகிறது
கரும்புகளை கடித்து சாப்பிட்டாலே பற்களுக்கு நல்ல வலிமையை தரும். இதன் சாற்றை பருகுவதால் பற்களின் ஈறுகள் சேதமடைந்து இருப்பவர்கள் கரும்புச்சாற்றை சாப்பிடுவதால் ஈறுகளுக்கு வலிமையை அளிக்கிறது.
நீர்ச்சத்து
கோடைகாலங்களில் உடலில் நீர்ச்சத்து குறைந்து உடல் அடிக்கடி சோர்ந்து காணப்படும், இவர்கள் கரும்புச்சாற்றை பருகுவதால் உடலுக்கு தேவையான ஆற்றலை தரும் உடலை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். மேலும் நுரையீரலை மற்றும் இதயத்திற்கு பலம் அளிக்கிறது.
உடல் சூடு குறைய
கரும்புச்சாற்றுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் எரிச்சலை சரி செய்கிறது. உடல் சூட்டை தனித்து குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது.
மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.
மூளைதான் நம் உடலில் அனைத்து இயக்கங்களையும் இயக்குகிறது. மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க கரும்புச்சாறு உதவுகிறது.
செரிமானம், கல்லீரல் பிரச்சினை தீர
கரும்புச்சாற்றில் பொட்டாசியச்சத்து நிறைந்து காணப்படுவதால் செரிமானக்கோளாறுகளை சரிசெய்கிறது. மேலும் கல்லீரல் நன்கு செயல்பட உதவுகிறது
சீறுநீர் பிரச்சினை தீர
சீறுநீர் கழிக்கும்போது எரிச்சல் பிரச்சினை உள்ளவர்களுக்கு கரும்புச்சாறு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். இதை அடிக்கடி சாப்பிட்டுவந்தால் அப்பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.
கொழுப்பை குறைக்கும்
கரும்பில் பாலிஃபீனால் எனும் வேதிப்பொருள் இரத்த அணுக்கள் ஒன்றுக்கொன்று இணைத்து ஏற்படக்கூடிய இரத்த உறைவை தடுப்பதுடன் இரத்தத்தில் உள்ளை கொழுப்பையும் குறைக்கிறது.
இவ்வளவு நன்மைகள் உள்ள கரும்புச் சாற்றை அடிக்கடி பருகினால் இயற்கையாகவே நம் உடல் எதிர்ப்பு ஆற்றலை பெறுகிறது. மேலும் எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.