சித்த மருத்துவம்லேகியம்
பூண்டு லேகியம்
பூண்டு லேகியம் வயிற்று பொருமல், இருமல், என்புருக்கி ஆகிய நோய்களை தீர்க்க கூடியது.
தேவையானவை
- பூண்டு – 400 கிராம்
- பால் – 1 லிட்டர்
- பனை வெல்லம் – 400 கிராம்
- வெண்ணெய் – 300 கிராம்
செய்முறை
பூண்டை தோல் நீக்கி பாலில் வேகவைத்து நன்றாக வெந்ததும் கடைந்து எடுத்து அத்துடன் பனைவெல்லம், வெண்ணை சேர்த்து கிளறி லேகிய பதத்திற்கு வந்ததும் பதப்படுத்தி வைத்துக்கொள்ளவும்.
சாப்பிடும் அளவு
தினமும் 5 கிராம் அளவு காலை, மாலை சாப்பிடவும்.
தீரும் நோய்கள்
வயிற்றுக்கோளாறு, இருமல், என் புருக்கி ஆகியவை குணமாகும்.