சித்த மருத்துவம்சூரணம்
நிலாவரை சூரணம்
நிலாவரை சூரணம் வாயு, வயிற்று கோளாறு, வாந்தி, பித்த நோய்களை, உடம்பு எரிச்சல் ஆகிய நோய்களை குணமாக்குகிறது.
தேவையானவை
- நிலாவரை – 10 கிராம்
- சுக்கு – 10 கிராம்
- மிளகு – 10 கிராம்
- ஓமம் – 10 கிராம்
- வாய்விளங்கம் – 10 கிராம்
- நாட்டு சர்க்கரை – 50 கிராம்
நிலாவரை சுத்தி செய்யும் முறை
நிலாவரை இலையை நன்றாக சுத்தம் செய்து பசும்பாலில் புட்டு அவிப்பது போல் அவித்து காயவைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
செய்முறை
நிலாவரை, சுக்கு, மிளகு, ஓமம், வாய்விளங்கம் ஆகிய அனைத்தையும் ஒன்றாக போட்டு இடித்து சலித்து எடுத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
அளவு
2 கிராம்
சாப்பிடும் முறை
வெந்நீரில் கலந்து காலை, மாலை என இருவேளை சாப்பிடவும்.
குணம்
வாயு, வயிற்று கோளாறு, பொருமல் , விக்கல் , சளி, வாந்தி, பித்த நோய்களை, உடம்பு எரிச்சல் ஆகிய நோய்களை குணமாக்குகிறது.