நில ஆவாரை மருத்துவ பயன்கள்
நில ஆவாரை ஆவாரம்பூ போன்றே வெளிறிய இலைகளையும் மஞ்சள் நிற பூக்களையும் உடையது. இது தரையோடு படர்ந்து வளரக்கூடிய செடியினம். தென் தமிழகத்தில் அதிகளவு காணப்படும். இதன் இலை மருத்துவ பயனுடையது.
நிலாவாரை யின்குணத்தா னீகேண் மயிலே
பலமூல வாயுவெப்பு பாவைச் – சிலாகிரந்தி
பொல்லாத குன்மம் பொருமுலக் கட்டுமுத
லெல்லா மகற்றுமென வெண்
குணம்
பற்பல மூலவாயுக்கள், சுரம், வயிற்றுவலி, வயிற்றை உப்ப செய்கின்ற மலக்கட்டு இவைகள் நீங்கும் என்க
சொறி, சிரங்கு
இலையை சாறு எடுத்து அதனுடன் காடி சேர்த்து சொறி, சிரங்கு, படை போன்ற தோல்நோய்களுக்கு பூசி வர விரைவில் ஆறும்.
முடி உதிர்தல், செம்பட்டை முடிக்கு
இதன் இலையுடன் மருதாணி இலையுடன் சேர்த்து அரைத்து கூந்தல் உதிரும் இடத்தில் தடவி வர முடி உதிர்தல் நின்று விடும். மேலும் செம்பட்டை முடிக்கு தடவி வர முடி கறுமை நிறமாகும்.
மலச்சிக்கலுக்கு
இதன் இலையை துவையலாக அரைத்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
நில ஆவாரை சூரணம்
நில ஆவாரை சூரணம் 2 கிராம் வெந்நீரில் கலந்து சாப்பிட வாயு, வயிற்று பொருமல், வாந்தி, பித்தம் குணமாகும்.