குதிரைவாலி பயன்கள்
குதிரைவாலி சிறுதானியங்களில் மிகச் சிறந்த சத்துக்களை கொண்டதாகும். மற்ற தானியர்களைவிட அளவில் சிறியதாகும். குதிரை வாலி கோதுமையை விட அதிக சத்துக்களை கொண்டது. இந்தியாவில் ஆந்திரா,கர்நாடகா,பீகார், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் தமிழ்நாட்டில் சில இடங்களிலும் பயிரிடப்படுகிறது.
கடுப்பு கழிச்சல் கனன்றசுர தாக
மிடுப்புவலி வாத மிவற்றோ – டடுப்ப
விதிரைவா வென்றழைக்கு மேகமும் போகுங்
குதிரைவா லிக்குக் குழைந்து
குதிரைவாலியில் புரத சத்து, கொழுப்பு சத்து, தாது உப்புகள், நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது.
நீரிழிவு நோய்
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தன்மை குதிரை வாலியில் நிறைந்து. இரத்தத்தில் சேரும் சர்க்கரையின் அளவை குறைப்பதினால் சர்க்கரை நோயாளிகள் இத்தானியத்தில் செய்யப்படும் உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாடுடன் வைக்க உதவுகிறது.
செரிமான கோளாறு
குதிரைவாலியில் நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து அதிகளவில் இருப்பதால் செரிமான குறைபாடுகளை நீக்குகிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சினையும் சரிசெய்கிறது.
இரத்தசோகை
உடல் சீராக இருக்க குதிரைவாலி உதவுகிறது. இது உடலில் ஆண்டி ஆக்சிடன்ட் ஆக வேலை செய்கிறது. இரத்த சோகை வராமல் இருக்க உதவுகிறது.