குடிநீர்சித்த மருத்துவம்
கீழாநெல்லி குடிநீர்
கீழாநெல்லி மஞ்சள் காமாலையை குணமாக்குவதில் சிறந்த மூலிகையாகும். இதை குடிநீராக காய்ச்சி பயன்படுத்துவது எப்படி என்பதை பார்ப்போம்.
தேவையான மூலிகைகள்
- கீழாநெல்லி – 50 கிராம்
- விஷ்ணுகிராந்தி – 50 கிராம்
- கரிசலாங்கண்ணி – 50 கிராம்
- சீரகம் – 5 கிராம்
- ஏலக்காய் – 5 கிராம்
- பரங்கி சக்கை – 5 கிராம்
- உலர்திராட்சை – 25 கிராம்
செய்முறை
மேற்கண்ட மூலிகைகளை இடித்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி 1/4 லிட்டராக வந்ததும் இறக்கி வடிகட்டி 100மிலி வீதம் காலை மாலை சாப்பிட்டு வர வேண்டும்.
பயன்கள்
- மஞ்சள் காமாலை குணமாகும்.
- இரத்த சோகை குணமாகும்.
- வாய்புண், வயிற்று புண் குணமாகும்.
- உடல் உறுதி பெரும்.
- பார்வைக்கோளாறு நீங்கும்.