100 ஆண்டு வாழ காயகற்ப உணவுகள்
சித்த மருத்துவத்தில் நோயில்லாமல் வாழ, வந்த நோய்களை குணமாக்கி மீண்டும் வராமல் தடுக்கக்கூடிய து காயகற்பம்.
காயகற்பம் என்பது உடலினை நூறாண்டுகாலம் வாழவைக்கும் முறையாகும். காயகற்ப முறை என்பது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் தோல் சுருக்கம், முடி நரைப்பது போன்றவற்றை தள்ளிப்போட உதவும். காயகற்ப முறை என்பது முறையான யோக பயிற்சியுடன் இருந்தால்தான் நல்லது.
காலமே யிஞ்சியுண்ணக் காட்டினார் சூத்திரத்தில்
மாலையதிலே கடுக்காய்
மத்தியான சுக்கருந்த
இதன் பொருள் காலையில் இஞ்சி, நண்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்
என்பதாகும்
இஞ்சி
இஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சளி, இருமல், வயிற்றுக்கோளாறு, நுரையீரல் பிரச்சினை, செரியாமை, வாந்தி, குமட்டல் போன்றவற்றை உடனே சரிசெய்கிறது.
தினமும் காலையில் இஞ்சி டீ குடித்து வர நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும். உடல் சுறுசுறுப்பாக இயங்கும்.
சுக்கு
இஞ்சியை உலர்த்தி பதப்படுத்தப்பட்டது தான் சுக்கு ஆகும். சுக்கிற்கு இணையான மருந்துமில்லை சுப்பிரமணியனுக்கு இணையான தெய்வமில்லை என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள்.
சுக்கு சித்த மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. திரிகடுகு சூரணத்தில் சேர்க்கப்படும் மூலிகையில் சுக்கும் ஒன்றாகும்.
உடலில் உள்ள நச்சு தன்மையை வெளியாக்கி உடலை தூய்மை படுத்துகிறது. மேலும் காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்புண், வாய்ப்புண்களை குணமாக்குகிறது.
கடுக்காய்
கடுக்காய் என்றும் இளமையான தோற்றத்தை தரும் மூலிகையாகும். கடுக்காய் திரிபலா சூரணத்தில் சேர்க்கப்படுகிறது.
கடுக்காய் உடல் வெப்பத்தை குறைக்கும், இரைப்பையை பலப்படுத்தும். இரத்தம் தூய்மை அடைய செய்யும். கடுக்காய் பல் பொடியில் சேர்க்கப்படுகிறது. இது பல் வலி மற்றும் பற்களுக்கு உறுதியை தருகிறது.