கருமுட்டை வளர
கருமுட்டை வளர்ச்சி என்பது சரியான அளவில் இருந்தால் மட்டுமே கருத்தரிப்பு என்பது நிகழும். இன்றைய சூழலில் பல காரணங்களால் இப்பிரச்சினை அதிகளவு உள்ளது. மன அழுத்தம், உணவு முறைகளில் மாற்றம் இவற்றினால் இப்பிரச்சினை அதிகளவு உள்ளது.இதை நம் உணவு முறைகளாலும் நம் சித்த மருத்துவ முறைகளாலும் எளிதில் தீர்க்க முடியும்.
கருமுட்டை வளர
- அசோகப்பட்டை, மாதுளை வேர்ப்பட்டை, மாதுளம் பழ ஓடு இம்மூன்றையும் சமஅளவு எடுத்து காயவைத்து இடித்து நன்றாக சலித்து 2 கிராம் அளவு காலை, மாலை வெந்நீரில் சாப்பிட்டு வர 120 நாட்களில் கருப்பை சார்ந்த பிரச்சனைகள் தீரும்.
- இலந்தை இலை ஒரு கைப்பிடி அளவு, மிளகு 6, பூண்டு பல் 5 இவற்றை அரைத்து மாதவிலக்கான முதல் 2 நாட்கள் கொடுத்து வரக் கருப்பை சார்ந்த பிரச்சினைகள் நீங்கும், கருமுட்டை வளர்ச்சி பெற்று குழந்தைப்பேறு உண்டாகும்.
- மாதுளை சூரணம் 3 கிராம் அளவு காலை, மாலை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர குழந்தை பேறு உண்டாகும்.
மாதவிடாய் சுழற்சி
மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்று இருந்தால் கண்டிப்பாக இனிப்பு பலகாரங்களை தவிர்த்து, உணவில் கீரைகள், பூண்டு குழம்பு, எள்ளு சாதம் இவற்றை சாப்பிடலாம்.
கருத்தரிப்புக்கு சிறந்த உணவு
கீரைகள் குழந்தைப்பேறு உண்டாக்க ஒரு சிறந்த உணவாகும். சோம்பேறித்தனம் படாமல் தினமும் ஒரு கீரையை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். முருங்கை கீரை, பசலை கீரை, அரைக்கீரை ஆகியவை ஆண்மையை அதிகரிக்கும் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
உளுந்து வடை
உளுந்தை நல்லெண்ணையில் வடை செய்து சாப்பிடலாம் இது கருமுட்டை வளர்ச்சிக்கு உதவும்.
உளுந்து முட்டை குழம்பு
உளுந்தை வறுத்து பொடியாக்கி அதனுடன் முட்டையை கலந்து தோசைபோல் சுட்டு பிறகு குழம்பு வைத்து சாப்பிடலாம். இது கருமுட்டை வளர்ச்சிக்கு சிறந்ததாகும்.
உளுந்தில் அதிகளவு ஊட்டச்சத்து நிறைந்துள்ளதால் இது எலும்புகளுக்கும் நல்லது.
கர்ப்ப விருத்தி எண்ணெய்
கர்ப்ப விருத்தி எண்ணையை 10 மிலி தினமும் காலை சாப்பிட்டு வர பெண்களுக்கு கருப்பை பிரச்சினைகள், சூட்டினால் சிசு சிதைதல் ஆகியவை குணமாகும்.
எண்ணெய் செய்முறை