கர்ப்ப விருத்தி எண்ணெய்
கர்ப்ப விருத்தி எண்ணெய் பெண்களுக்கு ஏற்படும் கருப்பை பிரச்சினைகளுக்கு சிறந்த மருந்தாக சித்த மருத்துவத்தில் சொல்லப்படுகிறது. அவற்றை எப்படி செய்து பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
தேவையானவை
- சிற்றாமணக்கு எண்ணெய் – 1 லிட்டர்
- நிலப்பனங்கிழங்கு – 35 கிராம்
- அமுக்கிரா கிழங்கு – 35 கிராம்
- சத்திச்சாரணைக்கிழங்கு – 35 கிராம்
- மெருகன் கிழங்கு – 35 கிராம்
- சின்ன வெங்காயம் – 150 கிராம்
- சோற்றுக்கற்றாழை – 150 கிராம் ( தோல்சிவியது )
- முடக்கற்றான் இலை – 150 கிராம்
கர்ப்ப விருத்தி எண்ணெய் செய்முறை
முதலில் சோற்றுக்கற்றாழையை ஏழுமுறை அலசி இடித்து சாராக எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு நிலப்பனங்கிழங்கு, அமுக்கிரா கிழங்கு, சத்திச்சாரணைக்கிழங்கு, மெருகன் கிழங்கு இவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். பிறகு சிற்றாமணக்கு எண்ணெய் காயவைத்து அதில் சோற்றுக்கற்றாழை சாற்றை ஊற்றி அதில் கிழங்கு வகைகள் அனைத்தையும் போட்டு அவை சிவந்து வரும்போது சின்ன வெங்காயத்தையும், முடக்கற்றான் இலையும் போட்டு அவைகள் சிவக்கும் பதத்தில் இறக்கி ஆறவைத்து வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்து கொள்ளவும்.
சாப்பிடும் முறை
இந்த எண்ணையை 10 மிலி தினமும் காலை சாப்பிட்டு வரவும்.
தீரும் நோய்கள்
பெண்களுக்கு கருப்பை பிரச்சினைகள் அனைத்தும் தீரும் இதனால் குழந்தை பேறுஉண்டாகும். மேக சூட்டினால் சிசு சிதைதல் குணமாகும், இதனால் பிணி இல்லாத நல்ல அழகான குழந்தை பிறக்கும். மேலும் வாயு, வயிற்று பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.