குடிநீர்சித்த மருத்துவம்
கண்டங்கத்திரி குடிநீர்
கண்டங்கத்திரி குடிநீர் அனைத்து விதமான காய்ச்சலையும் குணப்படுத்தும். கண்டங்கத்திரியை குடிநீராக வைத்து கொடுக்க தீவிரமான காய்ச்சலும் குணாகும்.
தேவையான மூலிகைகள்
- கண்டங்கத்திரி – 50 கிராம்
- ஆடாதொடை – 25 கிராம்
- விஷ்ணுகிராந்தி – 15 கிராம்
- பற்பாடகம் – 15 கிராம்
- சுக்கு – 10 கிராம்
- சீரகம் – 10 கிராம்
செய்முறை
அனைத்து மூலிகைகளையும் இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அரை லிட்டர் வரும் வரை காய்ச்சி இறக்கி வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
சாப்பிடும் முறை
ஒரு நாளைக்கு 100 மிலி வீதம் 4 வேளை கொடுக்கவும்.
பயன்கள்
புளு, நிமோனியா சுரம், தலையில் நீர் ஏற்ற காய்ச்சல் ஆகியவை குணமாகும்,