பானங்களை எவ்வாறு பருக வேண்டும்?
சூடான பானங்களை ( Hot Drinks ) பால், காஃபி, டீ குடிக்கின்ற போது நாவினால் சிறிது ருசித்து விரைவாக அருந்தி விட வேண்டும். ஏனென்றால் நாக்கு தாங்கி கொள்ளக்கூடிய பானம் வயிற்றுக்குள் செல்லும் போது பித்தம், கணையம், இன்சுலின் போன்ற சுரப்பிகள் நன்றாக விரிவடைந்து சுரந்து உணவு வகைகளோடு கலக்க எதுவாக இருக்கின்றன.
குளிர் பானங்கள்
குளிர்ந்த பானங்களை அருந்தும்போது அதிக நேரம் நாவினால் சுவைத்து நிதானமாகவே குடிக்க வேண்டும். ஏனென்றால் அதிக குளிர்ந்துள்ள பானங்களை நிதானமாக சுவைத்து சாப்பிடும் பொழுது உமிழ் நீர் கலக்கப்பெற்று மிதமான வெப்பநிலைக்கு மாறுதல் அடைந்து வயிற்றுக்குள் செல்லும்.
எனவே குளிந்த பானங்களை நிதானமாக நன்கு ருசித்து அருந்த வேண்டும்.குழந்தைகள் ஐஸ்கிரீம் வகைகளை அடிக்கடி சாப்பிடுவதால் வயிற்று சுரப்பிகள் பழுதடைந்து வியாதியை உண்டாக்குகிறது. எனவே குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வகைகளை வாங்கி கொடுப்பதை குறைத்துக்கொள்வது நல்லது.
இயற்கை உணவு
மனிதன் இன்று பலவகை உணவுகளை சாப்பிட்டு விரைவில் நோய்களுக்கு உட்பட்டு ஆரோக்கியத்தை இழப்பதோடு பொருளாதாரத்திலும் தாழ்வு நிலைக்கு சென்று விடுகிறான். எனவே இயற்கை உணவுகளை முடிந்தளவு சாப்பிட்டு ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ்வோம்.