நோயின்றி வாழ வழிமுறைகள்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழியின் படி நோயின்றி வாழ்த்தோமானால் அளவற்ற செல்வத்தைப் பெற்றவர்கள் ஆகின்றோம். நோயின்றி வாழும் வழியை இதன்மூலம் அறிவோம்.
நோயின்றி வாழ
மனிதர்களுக்கு நோய்கள் எப்படி ஏற்படுகின்றன என்பதை ஆராய்ந்து வருகிறது விஞ்ஞான உலகம். ஆனால் மனிதர்களுக்கு மட்டும் ஏன் நோய்கள் வருகின்றன என்பதை மெஞ்ஞானத்தால் மட்டுமே அறியமுடியும்.
அதாவது மனித இனத்தைத் தவிர தன்னிச்சையாகத் சுதந்திரமாகத் திரியும் சீவராசிகள் முதுமையும் அடைவதில்லை. நோயுற்று மற்றவர்களின் உதவியையும் நாடுவதில்லை. என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயமேயாகும் .
மேலும் விலங்கினங்களும், பறவை இனங்களும் முதுமையடைந்து மூக்குக் கண்ணாடி போட்டதாகவும் தெரியவில்லை. எதிர்காலத்திற்காக தேனீ, எறும்பு தவிர உணவு வகைகளை சேமித்து வைத்ததாகவும் அறியவில்லை.
இதற்கு எல்லாம் மூலகாரணத்தை ஆராய்கின்ற போது முதற்படியாக நாம் புரிந்து கொள்வது, அவை எவ்வித நோய்களினாலும் தாக்கப்படுவதில்லை என்பதாகும். மனிதர்களுக்குக் கட்டுப்படாத விலங்கினங்கள், பறவை இனங்களுக்கு ஏன் நோய்கள் வருவதில்லை. என்பதை சிந்தித்துப்பார்க்கின்றபோது ஓர் உண்மை நமக்குப் புலப்படுகிறது.
அதாவது அவை உட்கொள்ள வேண்டிய ஐந்து சுவைகளான காரம், கசப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, ஆகிய உருசிகளிற்குரிய உணவுப்பொருட்களை (காய், கனி, தழை, இறைச்சி, தானியங்கள்) உட்கொள்ளுகின்றன.
அறுசுவை உணவு
ஆனால் மனிதர்கள் முறைப்படி உண்ண வேண்டிய அறுசுவை உணவில் ‘கசப்பு’ சுவைக்குரியவைகளை மறந்து, நீக்கி, மீதமுள்ள காரம், இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, உப்பு ஆகிய ஐந்து சுவைகளிற்குரிய உணவு வகைகளையே உண்கின்றனர்.
ஆக ஓர் ருசி உணவில் குறைந்து விடுகிறதல்லவா? இதன் காரணமாக மனித உடலில் நோய்க்கிருமிகள் அழியாமல் பெருகிப் பலதரப்பட்ட நோய்கள் ஏற்பட்டு விரைவில மடியும் வாய்ப்பு உண்டாகின்றது அல்லவா?
ஆனால் கசப்பு சுவைக்குரிய அகத்திக்கீரை, பாவற்காய், சுண்டைக்காய், வேப்பம் பூ போன்றவைகளில் ஏதேனும் ஒற்றை அனுதினமும் உணவிற் கலந்து உட்கொண்டு வந்தால் நோய்க் கிருமிகள் உற்பத்தியாகாமலும் எதிர்காலத்தில் மட்டுமின்றி எப்பொழுதும் இயலாமையின்றி இறுதிவரை நோயின்றி முழு சக்தியுடன் வாழ முடியும் என்பதை அனுபவத்தில் அறியலாம்.
ஒரு மனிதன் முழு அறிவு எப்போது பெறமுடியும்? அறுவகை உருசியினைக் கொண்ட உணவினை அதாவது அறுவகை உருசிகளைச் சாப்பிட்டு வருவதால் உடலும்,உள்ளமும் முழு வளர்ச்சியடைந்து ‘அறிவு’ என்னும் அறிந்துகொள்ளும் உணர்வினை (நற்சிந்தனை)அடைந்து நலமுடன் வாழலாம்.
உதாரணம் : உண்மையைச் சொன்னால் கசக்கிறதா என்பது பழமொழி தானே அனைத்துத் துன்பங்களுக்கும் அறியாமைதான் மூலகாரணம் என விவேகானந்தர் கூறியுள்ளார் ஆகவே மேற்கூறிய “அறுசுவை உணவால்” அறிவு பெறுவோமானால் கதிரவனைக் கண்ட இருளைப்போல் அறியாமை எனும் இருள் அகன்று அனைத்துக் துன்பங்களும் மறைந்து விடுமல்லவா? மேலும் நோயின்றி வாழ்ந்து குறைவற்ற செல்வத்தை அடைந்து நீடுழி வாழ்வோமாக.