உங்கள் குடும்ப நலனுக்காக நீங்கள் பின்பற்ற வேண்டியவை
தற்போதைய சூழ்நிலையில் உணவு விசயத்தில் நாம் ஆரோக்கியத்தை விட்டுவிட்டு சுவைக்காகவும், நேரத்தை குறைப்பதற்காவும் இன்ஸ்டன்ட் உணவுகளை சாப்பிட தொடங்கி விட்டோம். மேலும் நம் எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியத்தை முற்றிலும் கெடுத்துவிட்டோம்.
இனிவரும் காலங்களில் பணம், சொத்தைவிட ஆரோக்கியமே ஒருவனுக்கு மிக மிக முக்கியமானதாகும்.
பழ வகைகளை உணவாக உண்ணுங்கள்
கொய்யாப்பழம், ஆரஞ்சு, மாதுளை, பப்பாளி, வாழைப்பழம், திராட்சை போன்ற பழ வகைகளை உணவாக எடுத்துக்கொள்ளுங்கள்.
கோதுமை
கோதுமையை பயன்படுத்தும் போது கடையில் உள்ளதை வாங்கி பயன்படுத்தாமல் கோதுமையை வாங்கி அரைத்து வைத்துக்கொள்ளுங்கள் ஏனென்றால் கடையில் உள்ள கோதுமை மாவில் செயற்கையாக சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது.
கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய்
பிள்ளைகளுக்கு சாக்லேட் வாங்கிக்கொடுப்பதை தவிர்த்து. கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய் போன்ற உடலுக்கு பலத்தை தருகின்றவற்றை குழுந்தைகளுக்கு கொடுக்கலாம்.
மைதாவை தவிர்க்கவும்
மைதா மாவில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை தவிர்ப்பது மிக மிக நல்லது. பரோட்டா, பிரட் மற்றும் பிஸ்கட் போன்றவற்றில் எந்தவித ஊட்டச்சத்துக்களும் இல்லை. அதில் ரசாயனங்கள் சேர்க்கப்படுவதால் அது நம்மை மெல்ல மெல்ல அழிவுக்கு வழிவகுக்கும்.
தினைவகை உணவுகள்
ராகி, வரகு, குதிரைவாலி, சாமை, சோளம், கம்பு போன்ற திணைவகை உணவுகளை அதிகளவு சேர்த்துக்கொள்ளுங்கள். இது நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நல்ல உடல் உறுதியை கொடுக்கும்.
சீனி என்ற வெள்ளை சர்க்கரை வேண்டாம்
வெள்ளை சர்க்கரையை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. இனிப்பு சுவைக்காக பனகற்கண்டு, பனைவெல்லம், பனங்கருப்பட்டி போன்றவற்றை பயன்படுத்தலாம். இயற்கை தேன் கிடைத்தால் அதையும் இனிப்பு சுவைக்காக பயன்படுத்துவது சிறந்தது.
டீ, காப்பி
டீ, காப்பிக்கு பதிலாக ப்ளாக் டீ, சுக்கு மல்லி காப்பி போன்றவற்றை பழக்கப்படுத்திக்கொள்ளவது மிகச்சிறந்தது. இதை பருகுவதால் உடல் சுறுசுறுப்பாக இருக்க உதவுவதோடு உடலுக்கு பல நன்மைகளையும் தருகிறது.
காய்கறி, கீரைகள்
காய்கறி மற்றும் கீரை வகைகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
சரியான உறக்கம்
சரியான நேரத்தில் தூங்கி அதிகையில் எழும் பழக்கைத்தை வைத்துக்கொள்ளுங்கள். அதை பிள்ளைகளும் பின்பற்றும்படி சொல்லிக்கொடுங்கள். நம் உடலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்க நல்ல தூக்கம் அவசியம்.