சித்த மருத்துவம்சூரணம்
ஏலாதி சூரணம்
ஏலாதி சூரணம் வாந்தி, அஜீரணம், பாக்டீரியா தொற்று, வாத பித்த நோய்களுக்கு சிறந்த மருந்தாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
தேவையானவை
ஏலக்காய் – 640 கிராம்
சர்க்கரை – 1250 கிராம்
சுக்கு – 320 கிராம்
தாளீசம் – 80 கிராம்
சிறுநாகப்பூ – 40 கிராம்
மிளகு – 20 கிராம்
இலவங்கம் – 10 கிராம்
செய்முறை
மேற்கண்ட அனைத்தையும் பொடிசெய்து சர்க்கரையுடன் கலந்து வைத்துக்கொள்ளவும்.
சாப்பிடும் அளவு
2 கிராம் அளவு ஏலாதி சூரணம் எடுத்து பாலில் அல்லது தேனுடன் சேர்த்து காலை, மாலை என இருவேளை சாப்பிடவும்.
தீரும் நோய்கள்
வாத பித்த நோய்கள், பித்த வாயு, எலும்புருக்கி, பெரும்பாடு, சொறி, சிரங்கு, வாந்தி, அஜீரணம், பாக்டீரியா தொற்று, நெஞ்செரிச்சல் ஆகியவை குணமாகும்.