அஷ்ட தீபாக்கினி சூரணம்
அஷ்ட தீபாக்கினி சூரணம் சாப்பிட வாயுவினால் வரும் நெஞ்சடைப்பு, பசியின்மை, வயிற்றுக்கோளாறு, வயிற்றுவலி, செரியாமை ஆகியவை குணமாகும். இதனை 5 கிராம் அளவு மோரில் கலந்து சாப்பிடலாம்.
தேவையானவை
- சுக்கு – 50 கிராம்
- மிளகு – 50 கிராம்
- திப்பிலி – 50 கிராம்
- சீரகம் – 50 கிராம்
- கருஞ்சீரகம் – 50 கிராம்
- ஓமம் – 50 கிராம்
- பெருங்காயம் – 50 கிராம்
- இந்துப்பு – 10 கிராம்
செய்முறை
பெருங்காயம், இந்துப்பை தவிர்த்து மற்ற கடைசரக்குகளை தனித்தனியே இளம் வறுப்பாக வறுத்து இடித்து சலித்து வைத்துக்கொள்ளவும். பிறகு பெருங்காயத்தை பொரித்து பொடி செய்யவும். இந்துப்பை நன்றாக பொடியாக்கி எல்லாவற்றையும் கலந்து வைத்துக்கொள்ளவும்.
அளவு
1 கிராம் முதல் 2 கிராம் வரை
சாப்பிடும் முறை
மோர், வெந்நீர், நெய் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
குணம்
அஜீரணம், ருசி இன்மை, பசியின்மை, வாத குன்மம், வயிற்று வலி, நெஞ்செரிச்சல், வாயுவினால் ஏற்படும் நெஞ்சடைப்பு, வயிற்றுப்போக்கு, செரியாமை ஆகியவை பிரச்சனைகளுக்கு ஏற்றது.
செரியாமை நீங்க
ஒரு தேக்கரண்டி அஷ்ட தீபாக்கினி சூரணத்தை சூடு சாதத்துடன் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட செரியாமை நீங்கும். வயிற்றுக்கோளாறு நீங்கும்.
நெஞ்சடைப்பு குணமாக
இரவில் சிலருக்கு உணவு செரிக்காமல் நெஞ்சடைப்பு வரும் அவர்கள் மோரில் ஒரு ஸ்பூன் அஷ்ட தீபாக்கினி சூரணம் கலந்து சாப்பிட ஏப்பம் வந்து வாயு நீங்கும்.