மூலிகைகள்
வேப்பிலை மருத்துவ பயன்கள்
வேப்பிலை பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இது கிருமிகளை அளிக்கக்கூடியது. வேப்பிலையை உழவர்கள் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்துகின்றன. வேப்பிலை குளிர்ச்சி தன்மை உள்ளதால் அம்மை நோய் வந்தவர்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது. சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகவும் விளங்குகிறது.
கிருமிகுட்ட மாந்தங் கெடுவிடஞ்சு ரங்கள்
பொருமியம சூரிகையின் புண்க – ளொருமிக்க
நிம்பத் திலையிருக்க நீடுலகி நீடுலகி நீங்காமற்
கம்பத் திலையிருக்கக் காண்
குணம்
வேப்பிலையினால் புழுக்கள், பெருவியாதி, மாந்தம், சுர ரோகங்கள், அம்மை கொப்பள ரணங்கள், பொருமல், பேதி, வயிற்றில் உண்டான கிருமிகள் ஒழியும் என்க.
பயன்கள்
- வேப்பிலையையும், மிளகையும் சிறிது உப்பு சேர்த்து அரைத்து சுண்டைக்காய் அளவு பெரியவர்களுக்கும், அதன் கால் பங்கு சிறியவர்களுக்கும் காலை, மாலை இரு வேளை கொடுத்துவர வயிற்றிலுள்ள கிருமிகள் மறையும்.
- வேப்பிலை கொழுந்து, ஓமம், மிளகு, வசம்பு, பூண்டு ஆகியவற்றை அரைத்து சுண்டைக்காய் அளவு சாப்பிட பொருமல், அசீரணம், குழந்தைகளுக்கு காணும் மாந்த கழிச்சல் தீரும்.
- வெப்பன்கொழுந்து, அதிமதுர பொடி சம அளவு எடுத்து நீர் விட்டு அரைத்து பட்டாணி அளவாய் மாத்திரை செய்து நிழலில் காயவைத்து நாள்தோறும் 3 வேளை ஓரிரு மாத்திரை கொடுத்துவர அம்மைநோய் தீரும்.
- வேப்பிலையை அரைத்து கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் முதலியவை தீரும்.
- வேப்பிலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து தடவி வர பொண்ணுக்கு வீங்கி, பித்த வெடிப்பு, கட்டி, பருக்கள், அம்மை கொப்பளங்கள் ஆகியவை குணமாகும்.
- வேப்பிலையை சிறிது சிறிதாக ஆரம்பித்து நாளுக்கு நாள் சாப்பிடுவது வழக்கம். இதை வேம்பு கற்பம் என அழைக்கப்படுகிறது. இதை கடைபிடித்து வந்தால் எந்த நோய்களும் வராது.