மூலிகைகள்
உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல், கர்ப்பப்பை கோளாறு நீக்கும் …வாழைப்பூ
வாழைப்பூ நம் ஆயுளை நோய்கள் இல்லாமல் நீட்டிக்க பயன்படும் ஒரு அற்புத மூலிகையாகும். வாழையின் அனைத்து பாகங்களுமே பயன்படக்கூடியது. இதில் வாழைப்பூவை சமைத்துண்ண நல்ல ருசியாக இருக்கும். இதில் மருத்துவ குணங்களும் அதிகமாக உள்ளதால் வாரத்தில் ஒருமுறையாவது சாப்பிடுவது நம் உடலை நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்ள உதவும். வாழைப்பூ பெண்களுக்கு ஒரு வரப்பிரசாத மூலிகையாகும்.
வாழைப்பூ மூலரத்த மாபிரமி வெட்டைபித்தங்
கோழைவயிற் றுக்கடுப்பு கொல்காச – மாழியன
லென்னவெரி கைகா லெரிவுந் தொலைந்துடலின்
மன்னவளர்க் குந்தாது வை.
குணம்
வாழைப்பூவினால் ரத்தமூலம், பிரமேகம், வெள்ளை, மனக்குழப்பம், கபாதிக்கம், உத்திரக்கடுப்பு, இருமல், கை கால் எரிச்சல் இவைகளை நீக்கும். சுக்கிலவிருத்தியைத் தரும்.
பயன்கள்
- வாழைப்பூவைப் பொறியலாகவும், அல்லது துவரம்பருப்புடன் கூட்டு செய்து உண்பது வழக்கம். இதனால் உஷ்ணபேதி, இரத்தமூலம், சீதபேதி முதலியவைகள் குணமாகும்.
- வாழைப்பூவை இடித்துச் சாறு எடுத்து அதனுடன் தயிர் சேர்த்து சாப்பிட மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்றுவலி, அதிக உதிரப்போக்கு ஆகியவை நீங்கும்.
- இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறு நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு உண்டாகும்.
- வாழைப்பூவுடன் துவரம் பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாகும். மாதவிலக்கின் போது ஏற்படும் அசதி நீங்கும்.
- வாழைப்பூவை பருப்புடன் சேர்த்து கடைந்து சிறிதளவு நெய் சேர்த்து சாப்பிட உடல் சூடு குறைந்து குளிர்ச்சி உண்டாகும்.
- வாழைப்பூவினால் ஆண்மை குறைவு நீங்கி சுக்கில விருத்தி அடையும்.