வயிற்றுப்புண்ணை குணமாக்கும் மாங்காய் வற்றல் குழம்பு
தேவையான பொருட்கள்
மிளகு – 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
ஜீரகம் – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – சிறிதளவு
பெருங்காயம் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
மாங்காய் வற்றல் – தேவையான அளவு
புளி – சிறிதளவு
செய்முறை
மிளகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, ஜீரகம், வெந்தயம் இவற்றைக் கொஞ்சம் எண்ணெய்விட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையையும் பெருங்காயத்தையும் பொறித்து எடுத்துக் கொண்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மாங்காய் வற்றலை உபயோகிக்கவும். மாங்காய் வற்றலில் புளிப்பு இருக்கும். எனவே புளி சிறிதளவு எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து சிறிதளவு தண்ணீர் விட்டு மாங்காய்த் தளிரை அலசி அலம்பி சற்று வேகவிடவும்.
மாங்கொட்டையிலுள்ள விதையை வறுத்த சாமான்களுடன் வைத்து அரைத்துக் கொண்டு குழம்பு செய்யலாம். ஏனென்றால் மாங்காய் வற்றலிலுள்ள பருப்புக்கு வயிற்றுப் புண்ணைத் தீர்க்கும் சக்தி இருக்கிறது. மாந்தளிர் வெந்தபிறகு அரைத்த விழுதை நன்றாகக் கரைத்துப் பாத்திரத்தில் விடவேண்டும். தேவையான அளவு உப்பு, மஞ்சள்பொடி, பெருங்காயம் போடவும்.
மேற்கண்ட கரைசல் நன்கு கொதித்ததும் சிறிதளவு கடலை மாவைக் கரைத்து சேர்த்து, நன்கு கொதித்ததும் இறக்கவேண்டும். பிறகு ஜீரகம், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.