அழகு
முழங்கை, முழங்கால் கருமையை நீக்க சில இயற்கை வழிமுறைகள்
முழங்கை மற்றும் முழங்காலில் இருக்கும் கருமையான தோல்கள் மற்றும் சிலருக்கு சிறு சிறு பருக்கள் போன்று இருக்கும் அவற்றை இயற்கை முறையில் நீக்குவது எப்படி என்று பார்ப்போம்.
கருமையை நீக்க சில வழிமுறைகள்
- தேங்காய் எண்ணையுடன் ஆவாரம்பூ சேர்த்து காய்ச்சி தேய்த்து வர முழங்கை, முழங்கால் கருமை நீங்கும்.
- எலுமிச்சை சாறுடன் சிறிதளவு உப்பு சேர்த்து தடவிவர நாளடைவில் கருமை நிறத்தை நீக்கி நல்ல பொலிவை தரும்.
- மஞ்சள் தூளை பாலில் கலந்து முட்டிகளில் தடவினால் கருமையான நிறம் மாறி இயற்கையான நிறம் கிடைக்கும்.
- ஆடு தீண்டாப்பாளை மூலிகையை சாறு எடுத்து அதை நல்லெண்ணையில் கலந்து அந்த சாறு வற்றும் வரை காய்ச்சி தேய்த்து வர மாறும்.
- மஞ்சள் தூள், சந்தன தூள், கடலை மாவு மூன்றையும் கலந்து சருமத்தில் தேய்த்து வர நல்ல பொலிவைத்தரும். முழங்கை மற்றும் முழங்கால் கருமையும் நீங்கும்.
- வெள்ளைநிறப்பூ காக்கரட்டான் மூலிகை இலையை அரைத்து முழங்கை மற்றும் முழங்காலில் தேய்த்து வர கருமை நீங்கும், இதை சருமத்தில் உள்ள கரும்படைகளிலும் தேய்த்து வர கரும்படை நீங்கும்.