அழகு
முகம் பளபளப்பாக இயற்கை வழிமுறைகள்
முகம் பளபளப்பாக இயற்கை வழிமுறைகள் ஏராளமாக உள்ளது அவற்றை பின்பற்றினாலே பக்கவிளைவுகள் ஏதுமின்றி இயற்கையான அழகை நாம் பெறலாம்.
இயற்கை வழிமுறைகள்
- தேனுடன் உருளைக்கிழங்கு சாறு சம அளவு சேர்த்து கலந்து முகத்தில் தடவி அரைமணிநேரம் கழித்து கழுவிவிடவும். இதுபோல் செய்து வர முகம் பளபளப்பாக மாறும்.
- வெற்றிலையும் புதினாவும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து இடித்து சாறுபிழிந்து மோருடன் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகப்பொலிவு பெறும்.
- முருங்கை பிசினை நன்றாக காயவைத்து இடித்து தூள் செய்து அதை பாலில் போட்டு பனகற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர முக பொலிவு பெறும்.
- தக்காளியை நன்றாக பசைபோல் அரைத்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவி விடவும். இதனை ஒருநாளுக்கு 2,3 தடவை செய்ய முகத்தில் உள்ள கரும்புள்ளி நீங்கி நல்ல பொலிவை பெறும்.
- வெள்ளரிக்காயை இடித்து சாறுஎடுத்து ஒரு வெள்ளைத்துணியில் நனைத்து முகத்தில் நன்றாக படும்படியாக தேய்த்து சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வர முகம் பளிச்சென்று இருக்கும்.
- ஆரஞ்சு பழச்சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து பயத்தமாவில் முகத்தை கழுவி வர நல்ல முக அழகைப்பெறலாம்.
- நல்ல கெட்டி தயிரை எடுத்து முகத்தில் பூசிவந்தால் முகம் நல்ல மென்மையடையும்.
- பாலாடை, தர்பூசணி பழச்சாறு, வெள்ளரிக்காய் சாறு இவற்றை சமஅளவு எடுத்து சிறிதளவு பன்னீர் கலந்து முகத்தில் பூசி நன்றாக ஊறவைத்து கழுவி வர முகம் பளிச்சென்று மாறும்.
- பாலில் சிறிது தேன் கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவி வர முகம் பொலிவு பெறும்.