மலச்சிக்கலும் அதற்கான மருத்துவமும்
பரபரப்பான நவீன வாழ்க்கை முறைதான் மலச்சிக்கலுக்கு பெரும்பாலும் காரணமாகிறது. போதுமான தண்ணீர் குடிக்காமை-நார்ச்சத்து உணவுகளை அதிகம் சாப்பிடாதது குறித்த நேரத்தில் மலத்தை வெளியேற்றாதது போன்றவை மலச்சிக்கலுக்கு காரணமாகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது மலத்தை வெளியேற்ற வேண்டும் அப்போதுதான் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது மலத்தை வெளியேற்ற வேண்டும். என்றாலும் தொடர்ச்சியாக பல நாட்கள் மலத்தை வெளியேற்றாவிட்டால் இச்சிக்கல் ஏற்படும் பல தொந்தரவுகளை மேற்கொள்ள வேண்டி வரும்.
குடலில் கேன்சர் – சர்க்கரைவியாதி இருந்தாலும் – மன அழுத்தம் இருந்தாலும் மலச்சிக்கல் ஏற்படும். பல காரணங்களால் அதிக அளவு பெண்கள் மலச்சிக்கலால் அவதிப்படுவார்கள் பெரும்பாலும் கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் ஏற்படும்.
மலச்சிக்கல் உள்ளவர்கள் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு வகை சாப்பிட வேண்டும். இரவு படுக்கப் போகும் போது இரண்டு வாழைப்பழங்களையாவது சாப்பிட்டு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
மருத்துவம்
அத்திக்காயை சமைத்து சாப்பிட்டுவர மலச்சிக்கல் நீங்கும்.
கொன்றைக்காய் அல்லது கொழுந்து இலைகளை தட்டிப் போட்டு போதுமான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.
ஆமணக்கு விதையின் மேல் தோலை நீக்கி புளி, மிளகாய், உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.
தூதுவேளைக் காயை உலர்த்தி தயிர், உப்பு ஆகியவற்றில் பதப்படுத்தி எண்ணையில் வறுத்து உண்டு வரத் தீரும்.
நில ஆவாரை இலையைத் துவையலாய் அரைத்து இரவில் பயன்படுத்தி வரத் தீரும்.
அகத்திக்கீரையை வாரம் ஒரு முறை சமைத்து உண்ணத் தீரும்.
நாள்தோறும் ஒரு துண்டு பப்பாளிப் பழம் சாப்பிடத் தீரும்
முடக்கத்தான் இலையை அவித்துச் சாறு எடுத்து ரசமாக்கி உணவோடு வரம் ஒரு முறை சாப்பிட்டு வர தீரும்.