மஞ்சள் காமாலை குணமாக
மனிதர்களுக்கு வரும் நோய்களில் மிகவும் துன்பம் தரக்கூடியவற்றில் மஞ்சள் காமாலை – என்னும் வியாதியும் ஒன்றாகும்.
இவ்வியாதியால் பலர் இறக்க நேரிடுவதுமுண்டு. இது நாம் உண்ணும் உணவு முறைப்படி சீரணமடையாமல் ரத்தம் கெட்டு அதனால் உண்டாகும் வியாதியாகும். அதாவது நம் வயிற்றுப் பகுதியில் கல்லீரலில் இருந்து உற்பத்தியாகும் பித்தநீர் ஒரு குறிப்பிட்ட அளவு உணவோடு கலந்து சீரணிக்கப்பெறவேண்டும். சுரப்பிகளிலிருந்து வரும் பித்த நீர் கலக்க முடியாமல் போய்விடுகிறது.
இம்மாதிரி நேரங்களில் குமட்டல், பசியில்லாதிருத்தல், அசதி, சிறு நீர் மஞ்சளாக வருதல், மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் தோன்றும், மேலும் கண் மஞ்சள் நிறமடையும். மலம் சிறிது கெட்டியாகவும் வெண்மை நிறமாகயும் காணப்படும். ஒரு சிலருக்கு காய்ச்சலும் விட்டு விட்டு வரும்.
மஞ்சள் காமாலை வராமல் தடுப்பது எப்படி?
உணவு வகையில் ஏதேனும் ஒரு கசப்புக்குரிய காய்கறி, கீரை வகையை தினமும் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வரவேண்டும் உடம்பை அளவுக்கு மீறி அலைச்சலால் வருத்திக் கொள்ளக் கூடாது.
மலச்சிக்கலின்றி வாழப் பழகிக் கொள்ள வேண்டும். மலச்சிக்கல் ஏற்படுவதற்கு மூலகாரணம் தூக்க குறைவு எனச் சொல்லலாம். ஆகவே அன்றாடம் முறைப்படி வேலை செய்து ஓய்வு எடுத்துக் கொண்டு இரவு நேரங்களில் ஒழுங்காக உறங்க வேண்டும். எண்ணெய்ப் பலகாரங்களை அளவாகப் பயன்படுத்தி வரவேண்டும்.
மஞ்சள் காமாலை குணமாக மருந்து
- கீழாநெல்லி இலை – 25 கிராம்
- மஞ்சள் தூள் – 10 கிராம்
- முற்றிய வேப்பிலை – 25 கிராம்
பயன்படுத்தும் முறை
இவைகளை சேர்த்து கசாயம் தயாரித்து தினமும் காலையில் முழுக் கசாயத்தையும் சிறிது சூடேற்றி அதிலிருந்து 75 மில்லி எடுத்து நாவினால் ருசித்து அருந்த வேண்டும். அதற்குப் பின்னர் அரை மணி நேரம் கழித்துதான் காலை உணவு உட்க்கொள்ள வேண்டும். மீண்டும் மாலை 7 மணி அளவில் ( அன்றைய தினம் மறு முறை கசாயத்தைச் சூடு செய்யத் தேவையில்லை ) 75 மில்லி கசாயம் அருந்தி வர வேண்டும்.