மூலிகைகள்
புளி மருத்துவ பயன்கள்
எதிரடுக்கில் அமைந்த சிறகமைப்பு கூட்டிலைகளையும் பழுப்புநிற கணிகளையுடைய பெருமரம். இலை, பூ, காய், கனி, விதை ஆகியவை மருத்துவ பயனுடையது. இலை. வீக்கம் கட்டிகளை கரைக்கும், பூ குளிர்ச்சி தரும், காய் பித்தம் தணிக்கும், பழம் குடல் வாயுவகற்றும் குளிர்ச்சி தரும், மலமிளக்கும். பட்டை சதை. நரம்புகளை சுருங்க செய்யும் தாது பலன்தரும், கொட்டை சிறுநீர் பெருக்கும்.
பயன்கள்
- தளிரை துவையலாக்கி உண்ணப் பித்தத்தை சமனாக்கி வயிற்று மந்தத்தை நீக்கும்.
- ஆமணக்கு நெய் தடவி, புளிய இலை எடுத்து ஒட்டவைத்து 2 மணிநேரம் கழித்து வெந்நீரில் உருவி விட்டால் கை, கால், வீக்கம், மூட்டு வலி. கை கால், தோள்பட்டை, கழுத்து சுளுக்கு நீங்கும்.
- புளியிலை சாறு 30 மி.லி நன்றாக கொதிக்க வைத்து பால் கலந்து சாப்பிட இரத்தபேதி, சீதபேதி நிற்கும்.
- புளியம் பூவை அரைத்து கண்ணை சுற்றி பற்றிடக் கண்வலி, சிவந்த கண் மாறும்.
- பழையபுளி, மஞ்சள் கரிசலாங்கண்ணி சமஅளவு எடுத்து அரைத்து 2 நெல்லிக்காய் அளவு காலை, மாலை என இருவாரங்கள் கொடுக்க கருப்பை இறக்கம் குணமாகும்.
- புளியுடன் உப்பு சேர்த்து அரைத்து உள்நாக்கில் தடவி வர உள்நாக்கு சதை வளர்வது தடைபடும்.
- புளியங்கொட்டையின் தோல், மாதுளம் பழத்தோல் சம அளவு எடுத்து இடித்து 10 அரிசி எடை அளவு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வெப்ப பேதி, வாந்தி பேதி, சீதபேதி, வாயு, பொருமல் தீரும்.
- புளியங்கொட்டை தோல், கருவேலம்பட்டை தூள், சமன் கலந்து உப்பு சேர்த்து பல் தேய்த்து வர பல் கூச்சம், பல் ஆட்டம், சீழ், இரத்தம் வருதல் ஈறு வீக்கம் தீரும்.
- புளியம்பட்டை தூளும், உப்பும் சமனெடை கலந்து வெண்ணிறமாகும் வரை வறுத்து அரைத்து 100 மி.லி சீரக குடிநீரில் காலை, மாலை கொடுக்க செரியாமை, வயிற்றுப் புண், வயிற்று வலி தீரும்.