உணவே மருந்து
புளிச்சகீரை துவையல்
தேவையானவை
- புளிச்சக்கீரை – 2 கைப்பிடி அளவு
- உளுந்து – 50 கிராம்
- பூண்டு பல் – 10
- காய்ந்த மிளகாய் – 5
- நல்லெண்ணெய்
- கடுகு
செய்முறை
புளிச்சக்கீரை 2 கைப்பிடி அளவு எடுத்து கொள்ளவேண்டும். நன்கு சுத்தமாக கழுவி வைத்துக்கொள்ளயும். பிறகு உளுந்தை வறுத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு பாத்திரத்தில் எண்ணையை ஊற்றி புளிச்சக்கீரை மற்றும் பூண்டு பல், காய்ந்த மிளகாய் இவைகளை போட்டு ஒன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு கீரையோடு வதக்கிய பொருள்கள் மற்றும் வறுத்த உளுந்து சிறிது உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக்கொண்டு தாளித்து இறக்கி வைத்துக்கொள்ளவேண்டும்.
உணவிற்கு
- இட்லி (அ) தோசையில் சேர்த்து சாப்பிடலாம்.
- தயிர் சாதத்திற்கு துவையலாக உண்ணலாம்.
மருத்துவ பயன்கள்
- குழந்தைகளுக்கு முக்கியமான உணவு.
- இரத்தம் குறைவாக உள்ளவர்கள் மற்றும் சத்துக் குறைவானவர்கள் சாப்பிடலாம்.
- ஆண்மை பெண்மை பெருகும்.
- மலச்சிக்கலுக்கு சிறந்த உணவு.
- மூட்டு வலி உள்ளவர்கள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும்.