மூலிகைகள்
சுவையின்மை…வயிற்றுப் பொருமல்…செரியாமை…நீக்கும் புதினா
புதினாவை வாசனைக்காக சமையலில் பயன்படுத்தினாலும் இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. புதினாவை நாம் வீட்டிலேயே வளர்த்து தினமும் பயன்படுத்தலாம். இதன் முக்கிய குணம் வாய், வயிற்று நோய்களை நீக்குகிறது.
அருசி யொடுவாந்தி யக்கினி மந்தங்
குருதி யழுக்குமலக் கொட்ட – லிரியுந்
துதியதன்று சொறிறங்குந் தொல்லுலகி னாளும்
புதியனல்ல மூலி புகல்
குணம்
புதியன் மூலி என்னும் புதியனாவினால் அருசி (சுவையின்மை), சர்த்தி(வாந்தி), மந்தாக்கினி(வயிற்றிரைச்சல், குடலிரைச்சல், செரியாமை), ரத்ததாதுவினலுக்கு, மலப்போக்கு இவைகள் நீங்கும்.
பயன்கள்
- புதினாவை சிறிது நெய் விட்டு வதக்கி அதனுடன் புளி, உப்பு, மிளகாய் முதலியவற்றை வைத்து அரைத்து துவையலாக அன்னத்துடன் கூட்டி உண்ண வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, செரியாமை , வாயு சம்பந்தமான நோய்களை நீக்கும்.
- உடல்பருமனையும் தொப்பையையும் குறைக்க உதவுகிறது.
- புதினா தோல்நோய்களை நீக்கி உடல் பொலிவை தருகிறது.
- மலச்சிக்கலை நீங்கி பசியை தூண்டும்.
- இதன் இலைச்சாறு எடுத்து வெந்நீரில் கலந்து வாய் கொப்பளிக்க துர்நாற்றம் விலகும்.
அசைவை உணவை எளிதில் சீரணமாக்குகிறது.