மூலிகைகள்
ஆண்மையை அதிகரிக்கும் புடலங்காய்
புடலங்காய் சத்துக்கள் அதிக நிறைந்துள்ள காய். தமிழர்களின் சமையலில் நீண்டகாலமாக பயன்படுத்தி வரும் காய்களில் புடலங்காயும் ஒன்று. இதை பருப்புடன் சேர்த்து கூட்டாக செய்து உண்பதுண்டு. புடலங்காய் ஆண்மையை அதிகரிக்கும்.
போகம் விளையும் பொருந்தி வளருமையை
மாகமதிற் பித்த மணுகுங்காண் – மேக
படலங் கவியளகப் பாவாய்க்கே ணாளும்
புடலங்காய்க் குள்ள புகழ்
குணம்
புடலங்காய்க்கு சுக்கிலமும், பித்தமும், கபமும் அதிகரிக்கும் என்க.
பயன்கள்
- புடலங்காய் விந்தணுவை கெட்டிப்படுத்தும். ஆண்மையை அதிகரித்து நல்ல உடலுறவை அளிக்கும் சக்தி இதற்கு உண்டு.
- வயிறுப்புண், குடல்புண், தொண்டை புண்களை ஆற்றும்.
- அசீரணத்தை போக்கி, மலச்சிக்கலையும் நீக்குகிறது. மூலநோய் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.
- உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வெளியேற்றுகிறது.
- நரம்புகளுக்கு புத்துணர்வை கொடுக்கிறது. கண்பார்வை கோளாறை நீக்குகிறது.
- உதடு மற்றும் நாக்குகளில் ஏற்படும் வெடிப்பை குணமாக்கும்.