மூலிகைகள்
பிரமிய வழுக்கை (நீர் பிரம்மி) மருத்துவ பயன்கள்
பிரமிய வழுக்கை சிறு இலைகளை எதிரடுக்கில் கொண்டு சிறிய நீல நிற மலர்களை உடைய குறுஞ்செடி. நீர் வளம் உள்ள இடங்களில் தானே வளர்கிறது. இதற்கு நீர் பிரம்மி என்றும் அழைக்கப்படுகிறது. இதன் இலைகளே மருத்துவ பயனுடையது.
கீளின் பசையாற் கிளைத்த வலிவீக்கங்
காலின் பிடிப்பொடுகை காலெரிவு – மெலிலெழு
வாதத்தா நோவு மலக்கட்டுஞ் சோபையும் போஞ்
சீதத்தாஞ் சப்தளைக்குத் தேர்
குணம்
சிறுநீர்ப் பெருக்குதல், மலமிளக்குதல், காமம் பெருக்குதல் ஆகியவை முக்கிய குணமுடையது.
பயன்கள்
- பிரமிய வழுக்கை செடியை நன்றாக நெகிழ அரைத்து எலுமிச்சை அளவு எடுத்து 200 மிலி பசும்பாலில் கலந்து வடிகட்டி காலையில் பருகிவர கிரந்தி, புண்புரைகள், சூலை, மேக வெட்டை முதலியவை நீங்கும்.
- இலைச்சாற்றுடன் மண்ணெண்ணையை கலந்து மேற்ப்பூச்சாக தேய்க்க கீல் வாத வலி, வீக்கம், பிடிப்பு ஆகியவை தீரும்.
- இலைச்சாற்றுடன் சம அளவு நெய் கலந்து பதமுற காய்ச்சி வடித்து காலை மாலை 1 தேக்கரண்டியாக கொடுத்து வர சித்தபிரமை, காக்கை வலி, மிகு பித்தம் முதலியவை தீரும்.
- பிரமிய வழுக்கை இலையை அரைத்து பற்றுப்போட வீக்கம் குறையும்.
- இலையை வேகவைத்து அரைத்து மார்பில் கட்டி வர சளி மிகுதியால் வரும் இருமல் குணமாகும்.