மூலிகைகள்
ஏராளமான மருத்துவ பயன்களை தரும் பாகற்காய்
பாகற்காய் கொடி வகையை சேர்ந்தது, இது கசப்பாக இருந்தாலும் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.பாகற்காய் ஆசிய நாடுகள் முழுமையும் பரவலாக விளைகிறது. ஆண்டுமுழுவதுமே கிடைக்க கூடியது.
பாகற்காயின் அறிவியல் பெயர் மொமோர்டிகா சாரண்டியா. வைட்டமின் பி3, வைட்டமின் பி5, வைட்டமின் பி6 போன்ற வைட்டமின்களும், இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் போன்ற தாதுக்களும் பாகற்காயில் இருப்பதால் உடலுக்கு மிகுந்த பயனளிக்கிறது.
பாகற்காய் மருத்துவ பயன்கள்
- மலச்சிக்கல் மற்றும் அசீரணத்தை போக்கும் மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
- இது புற்று நோய் உருவாக்கும் அணுக்களை அழிக்கிறது. மேலும் வியாதிகளை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கிறது.
- பாகற்காய் நீரிழிவில் இருந்தும் பாதுகாப்பு தருகிறது.
- பாகற்காயில் வைட்டமின் சி மிகுதியாக இருப்பதால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக உள்ளது.
- பாகற்காய் சூப்பை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தோல் நோய்களை போக்குவதுடன் தோல்களை பளபளப்பாக்கி என்றும் இளமை தோற்றத்தை தரும்.
- உடலில் கட்டி மற்றும் கண்நோய்களுக்கு சிறந்த மருந்தாக பாகற்காய் விளங்குகிறது.
முக்கிய குறிப்பு : பாகற்காயை குறைவான அளவே பயன்படுத்தவும் ஏனென்றால் வயிற்று வலி, வயிற்று போக்கு போன்றவைகளை உண்டாக்கும்.