பல் நோய்கள் தீர
பல்லில் ஏற்பட்ட குழி தொற்றுக்குள்ளாகும் போது பல்வலி ஏற்படுகிறது. பல்லின் வேர் முனையத் தொற்று அடைந்து சீழ் கட்டும்போது வலி தாங்க முடியாத அளவு ஏற்படுகிறது.
வலியுள்ள பல்லின் மீது திரிகடுகுப் பொடியை வைத்து சிறிது நேரம் அழுத்திப் பிடித்திருந்தால் வாயினின்று உமிழ்நீர் கூடுதலாக வெளியேறும். வலி தணியும் 2 முறை வீதம் ஓரிரு நாட்கள் செய்தால் நன்கு பயனளிக்கும்.
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கிக் கால் லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சி பால், சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர பல் வலி தீரும்.
நந்தியாவட்டை வேரை மெதுவாக மென்று துப்பப் பல் வலி தீரும்.
கருவேலம் பட்டை பற்பொடியில் பல் துலக்கி, மகிழ இலைக் கியாழத்தால் வாய்க்கொப்பளித்து வர பல் நோய் அனைத்தும் குணமாகும்.
பற்களில் தொற்று ஏற்படாதவாறு உணவுத் துணுக்குகள் அகற்றி பற்களை சுத்தம் செய்ய வேண்டும். பல்துலக்க உப்பையே நன்கு சன்னமாகப் பொடித்தும் பயன்படுத்தலாம்.
கருவேலம்பட்டை, வாதுமைக் கோட்டைத்தோல் சமனளவு கருக்கி பொடித்து பல் தேய்த்து வர பல் ஈரலில் உள்ள புண்கள், பல்வலி, பலவீக்கம், பல் ஆட்டம் ஆகியவை தீரும்.
காட்டாமணக்கு இளம் குச்சியால் பல் துலக்க பல் ஆட்டம், பல் வலி, பல் ஈறு சுரப்பு, இரத்தம் சொரிதல் தீரும்.