மூலிகைகள்
பறங்கிக்காய் மருத்துவ பயன்கள்
அகன்ற சுணையுடைய இலைகளையும் மஞ்சள் நிரப் பூக்களையும் உருண்டையான பெரிய சதைப்பற்றான மஞ்சள் நிறக்கணிகளையும் உடைய படர்கொடி. விதை, காயின் தோலுமே மருத்துவ பயனுடையது. காய், பழம் சமைத்துண்பதுண்டு.
அனலழலை நீக்கு மதிப்பித்தம் போக்குங்
கனலெனவே வன்பசியைக் காட்டும் – புனலாரு
மிக்கவைய முண்டாக்கு மென்கொடியே யெப்போதுஞ்
சர்க்கரைப்ப றங்கிக்காய் தான்
குணம்
இனிப்புள்ள பறங்கிக்காய் அனலால்வரும் அழற்சியையும், மிகுபித்ததையும் நீக்கும். நல்ல பசியையும் கப கோபத்தையும் நீக்கும்.
பயன்கள்
- 30 கிராம் பறங்கி விதையை சமனளவு சர்க்கரை சேர்த்து உண்டு காலையில் விளக்கெண்ணெய் பேதி கொடுக்க தட்டைப்புழு, மலப்புழுக்கள் கழியும்.
- விதையை தோல் நீக்கி உலர்த்திப் பொடி செய்து 8-ல் 1 பங்காக சீரகத்தூளில் கலந்து வெல்லத்துடன் உண்டு வர இரத்தவாந்தி, இரத்தபித்தம் நீங்கும்.
- பறங்கி விதை 30 கிராம், வெள்ளரி விதை 15 கிராம், பூனைக்காலி விதை 10 கிராம் அரை லிட்டர் நீர் விட்டு 150 மில்லலியாக காய்ச்சி வடிகட்டி காலை, மாலை குடித்து வர சிறுநீர்க் கோளாறு அனைத்தும் நீங்கும்.
- பறங்கி விதையை சாம்பலில் புரட்டி காயவைத்து மேல் தோலை நீக்கி சாப்பிட நல்ல ருசியாக இருக்கும். இது சரீரத்தின் வெப்பத்தை ஆற்றித் தேகக் கொழுப்பையும், தாது புஷ்டியையும் உண்டாக்கும். வெப்பத்தினால் உயர்ந்த பித்தத்தையும் சாந்தப்படுத்தும்.