மூலிகைகள்

பனை வெல்லம் மருத்துவ பயன்கள்

பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பதநீரை காய்ச்சி பனைவெல்லம் தயாரிக்கப்படுகிறது. பனைவெல்லத்தை கருப்பட்டி, பனாட்டு, பனை அட்டு போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

வட்டுபன வெல்லத்தால் மார்பெரிச்சல் குன்மமறும்
முட்டுந் திரிதோஷம் முன்னிற்கா-கட்டுபடா
வாந்தி ருசியின்மை வாளா யுற்றிடினும்
சாந்தி பெருகுமென்றே சாற்று

குணம்

பனை வெல்லத்தால் சுரசந்நிபாதம், திரிதோஷ தொந்தங்கள், அரோசகம், குன்மம்,மார்பு, எரிச்சல், இலைகள் நீங்கும் என்க.

பயன்கள்

  • பனைவெல்லத்தை தேனீரில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக உபயோகித்து வந்தால் தேகத்தின் வெப்பம் அடங்கும், பித்தம் தணியும், உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
  • பனை வெல்லம், குங்குமப்பூ, விளாம் பிசின் மூன்றையும் ஒன்றாக அரைத்து இரண்டு வட்டமான தாள்களில் தடவி இரண்டு கன்னங்களிலும் ஒட்டிவைக்க எந்தவிதமான தலைவலியும் குணமாகும்.
  • கால் கிலோ கருணைக்கிழங்கை சாறு எடுத்து அரை லிட்டர் பசும்பாலுடன் சேர்த்து நன்றாக சுண்டக்காய்ச்சி வைத்துக்கொண்டு அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர எந்த வகை மூலநோயாக இருந்தாலும் குணமாகும்.
  • சதகுப்பை, கருஞ்சீரகம், மர மஞ்சள், இவற்றை சமனெடையாக பொடித்து சமன் பனைவெல்லம் சேர்த்தரைத்து 5 கிராம் காலை, மாலை சாப்பிட்டு 5 நிமிடம் கழித்து சோம்பு குடிநீர் கொடுத்து வர உதிர்ச்சிக்கல் நீங்கி கருப்பை பலப்படும். கர்ப்பம் தரிக்கச்செய்யும்.
  • குப்பைமேனி இலையுடன் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட வறட்டு இருமல், நாள்பட்ட சளி தொல்லை நீங்கும்.
  • உளுந்துடன் பனைவெல்லம் சேர்த்து உளுந்துகளி செய்து சாப்பிட்டால் பெண்களுக்கு கருப்பை ஆரோக்கியமாக இருக்கும்.
  • குழந்தை முதல் பெரியவர்கள் அனைவரும் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + two =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!