மூலிகைகள்
பச்சைப்பயறு மருத்துவ பயன்கள்
நம் பாரம்பரிய உணவுமுறைகளில் பச்சைப்பயறு முக்கிய உணவாக திகழ்கிறது. இதில் ஊட்டச்சத்துகள் ஏராளமாக உள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாகும். தினசரி அதிக வேலை பளு உள்ளவர்கள் முளைக்கவைத்து காலையில் சாப்பிடலாம்.
பச்சைப் பயறதுதான் பாரிற் பயித்தியத்தை
பச்சமற நாளு மகற்றுங்காண் – கச்சுலவு
கொங்கைமட மாதே குளிர்ச்சியென்பா ரெப்போ துந்
தங்குவா தத்தைத் தரும்
குணம்
பச்சைப்பயறு பித்தத்தை நீக்கும், கபரோகத்தை போக்கும், அரோசகத்தை நீக்கும்.
பயன்கள்
- பச்சைப்பயற்றை நீர்விட்டு வேகவைத்து வடித்து, உப்பிட்டு சுண்டலாக உண்பதுண்டு. இதன் பருப்பை, அரிசி நெய்யுடன் கலந்து கஞ்சியாகவும் அல்லது அரிசி, கோதுமை நொய் முதலியவற்றுடன் கூட்டி பொங்கலாகவும் செய்து உண்பது வழக்கம். இது தேகத்தின் வெப்பத்தை நீக்கும், பித்தத்தை சாந்தப்படுத்தும்.
- பச்சைபயறுடன் கீரை வகைகளை கூட்டி கடையலாகவும் செய்து சாப்பிட தாது விருத்தியுண்டாகும்.
- இதன் மாவை தண்ணீர் விட்டு களி போல் கிளறி பால் கட்டு உண்டான பெண்களுக்கு மார்பில் வைத்து கட்ட நோய் நீங்கி எளிதில் பால் சுரப்பு உண்டாகும்.
- பச்சைப்பயறு கண்களுக்கு குளிர்ச்சி தரும். பார்வைத்திறனை அதிகரிக்கும்.
- முளைகட்டிய பச்சைப்பயறு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது.