மூலிகைகள்
நெய் மருத்துவ குணங்கள்
” நெய் யுருக்கியுண் ” என்ற சொல்லுக்கு ஏற்ப நெய்யை உருக்கி உண்பதே சிறந்ததாகும். ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகளவு இருந்து வந்துள்ளது. மனித உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுப்பதில் நெய் சிறந்த உணவாகும்.
நெய்யின் மருத்துவ பயன்கள்
- நெய்யை சோற்றில் சேர்த்து பிசைந்து சாப்பிட உடலில் உள்ள வெப்பத்தை நீக்கும், குடல் புண்களை நீக்கும்.
- ஞாபக சக்தியை அதிகரிக்கும், எலும்புகளில் உள்ள மச்சையை வலுவாக்கி எலும்பை உறுதியாக்கும்.
- இரத்தத்தை விருத்தியாகும், சருமத்திற்கு பளபளப்பை கொடுக்கும்.
கண் பார்வையை தெளிவடைய செய்யும். - எப்போதுமே உடல் சோர்வுடன் இருப்பவர்கள் தினமும் சிறுதளவு சாதத்துடன் நெய்யை சேர்த்து சாப்பிட்டு வந்தால் நாளடைவில் குணமாகும்.
- பசியின்மை, வாயுக்கோளாறுகளை நீக்கும்.
- வாய்வு மற்றும் பித்த சம்பந்தமான நோய்களுக்கு நெய் சிறந்த மருந்தாகும்.
- உடல் சிறுசுறுப்பாக இயங்க வைக்கும் சில கொழுப்பு சத்துக்களை தினமும் நெய்யை சாப்பிடுவதன் மூலம் பெறலாம்.
- இதய பாதிப்பு மற்றும் உடல் பருமன் உள்ளவர்கள் நெய்யை தவிர்ப்பது நல்லது.
பசு நெய்யின் குணம்
உடல் வெப்பம், வாந்தி, மேக நோய், வயிற்றில் உள்ள எரிச்சல், மூல நோய்களை குணமாகும்.
வெள்ளாட்டு நெய்யின் குணம்
உடலை உறுதியாக்கும், கண் பார்வை தெளிவாகும்.
கலப்பு நெய்
2, 3 நெய்களை கலந்துண்டால் பசியுண்டாக்கும், பித்தத்தை தணிக்கும், உடலுக்கு நல்ல பலத்தை தரும்.