மூலிகைகள்
பற்களை தூய்மையாக்கி முகத்தை வசீகரமாக்கும் நாயுருவி
எதிரடுக்கில் அமைந்த காம்புள்ள முழுமையான இலைகளையும் நீண்ட கதிர்களையும் உடைய சிறு செடி. செந்நாயுருவியில் தண்டும் இலையும் சிவந்து காணப்படும். எல்லாபாகங்களும் மருத்துவ பயனுடையது. தமிழகமெங்கும் காணப்படும்.சிறுநீர் பெருக்குதல், நோய் நீக்கி உடல் தேற்றுதல் சதை நரம்பு ஆகியவற்றைச் சுருங்க செய்தல் ஆகியவை இதன் பொது மருத்துவ குணங்களாகும்.
நாயுருவி மருத்துவ பயன்கள்
- நாயுருவி இலைச்சாற்றைத் தடவி வர தேமல், படை முதலியவை குணமாகும்.
- இலையைக் கசக்கித் தேய்க்க தேள் விஷம் இறங்கும்
- 10 கிராம் செந்நாயுருவி இலையை மென்மையாய் அரைத்து சிறிது நல்லெண்ணெய் கலந்து காலை மாலை 10 நாட்கள் கொடுக்க இரத்த மூலம் தீரும்.
- செந்நாயுருவி வேர்ப்பட்டை மிளகு சமனளவு பொடித்துக் கால் கிராம் தேனில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வர இருமல் குணமாகும்.
- நாயுருவி வேரால் பல் துலக்க பல் தூய்மையாகி முக வசீகரம் உண்டாகும்.