இயற்கையின் கொடை தென்னை
தென்னையையும் தேங்காயையும் அறியாதவர் இல்லையெனலாம். குருத்து, பூ, இளநீர், காய், மட்டை, ஆகியவை மருத்துவ பயனுடையது. தமிழகமெங்கும் பயிரிடப்படுகிறது.
இளநீர் வெப்பகற்றியாகவும், தாகம் தணிக்கவும், கேழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கவும் பயன்படும்.
பூ சதை நரம்புகளை சுருங்க செய்யும் மருந்தாகும். தேங்காயைப் பால் தாது வெப்பு அகற்றியாகவும், உடல் உரம் பெருக்கியாகவும், மலமிளக்கியாகவும் செயற்படும்.
மருத்துவ பயன்கள்
முற்றிய தேங்காயை துருவி விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் இரவில் கட்டி வர விதைவீக்கம் கரையும்.
தேங்காய்ப்பூவை வதக்கி மார்பில் கட்டி வர பால் சுரப்பு நிக்கும்.
தேங்காய் பாலை தினமும் கொப்பளித்து குடித்து வர நாக்குப்புண், உதட்டு ரணம், வாய் உள் புண், தொண்டை வயிற்றுப்புண் தீரும். காரம், உப்பு, புளி நீக்கி உணவு கொள்ள வேண்டும்.
இளந்தென்னங்காய் மட்டையை இடித்து பிழிந்து நீரை 100 மி.லி தினமும் காலையில் குடித்து வர அதிமூத்திரம், மது மேகம், நீர்ச்சுருக்கு, வயிற்றுக்கடுப்பு, மூலரணம் ஆகியவை தீரும்.
தென்னம் பூ 1 பிடி வாயிலிட்டு மென்று தின்ன மேக நோய், வெள்ளை, உட்சுரம், இரத்த வாந்தி, அரையாப்பு, கட்டி, சிலந்தி ஆகியவை தீரும். 10, 20 நாட்கள் பத்தியதுடன் சாப்பிடவும்.
இளநீர்
- இயற்கை பானமாக இளநீரை அப்படியே சாப்பிடலாம்.
- புத்துணர்ச்சி பானமாக இளநீரை அருந்தலாம். இயற்கை வழங்கிய கொடையே இளநீர். உடலின் உஷ்ணம் தணித்து குளிர்ச்சி தரும்.
- இளநீர் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக செயலாற்றுகிறது.
தேங்காய் எண்ணெய்
- வறுத்து, பொறித்து சாப்பிடும் உணவுகளை சமைக்க ஏற்றது தேங்காய் எண்ணெய்.
- 100 கிராம் தேங்காய் எண்ணையில் 44.6 கிராம் லூரிக் அமிலம் உள்ளது. 12 கார்பன் அணுக்களை கொண்ட இதுதான் தேங்காய் எண்ணெய்க்கு 45% கொழுப்புச்சத்தை வழங்குகிறது. இரத்த ஓட்டத்திற்கு நன்மை பயக்கும்.