சளி, இருமல், வயிற்றுப் பொருமலை தீர்க்கும் திப்பிலி
திப்பிலியில் யானை திப்பிலி, அரிசி திப்பிலி என 2 வகையான திப்பிலிகள் உள்ளன. பொதுவாக அரிசி திப்பிலியை மருந்தாக பயன்படுகிறது.
திப்பிலியின் றண்டுலத்தாற் றீராத வையமற்று
முப்பிசத்தை மேகத்தை யோட்டுங்காண் – தப்பாமல்
வாத சுரந்தனிக்கு மாகபரோ கந்தொலைக்குந்
தாதுவைநண் றய்வளர்க்குந் தான்
மருத்துவ பயன்கள்
திப்பிலியை வறுத்து பொடித்து அரை கிராம் தேனில் காலை மாலை சாப்பிட்டு வர இருமல், தொண்டை கம்மல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு ஆகியவை தீரும். இரைப்பை, ஈரல் ஆகியவை பலம் பெரும்.
திப்பிலி, மிளகு, சீரகம் – இவை மூன்றையும் சம அளவு எடுத்து இளவறுப்பாக வறுத்து பொடி செய்து ஒரு கிராம் அளவு நெய்யில் கலந்து உண்ண வயிற்று வலி குணமாகும்.
திப்பிலி, ஓமம், கருஞ்சீரகம் பொரித்த பெருங்காயம் சம அளவு எடுத்து பொடியாக்கி வெந்நீர் அல்லது மோரில் கலந்து உட்கொள்ள செரியாக் கழிச்சல், மந்தம், வயிற்றுப் பொருமல் வாய்வுத்தொல்லை ஆகியவை தீரும்.
திப்பிலியை நன்கு பொடிசெய்து தேனில் கலந்து ஒருமாதம் சாப்பிட்டு வர தேமல் மறையும்.
திப்பிலி ஒரு மடங்கு, துளசி 3 மடங்கு எடுத்து பொடி செய்து தேனில் உண்டு வர சளி, இருமல், இரைப்பு தீரும்.
திப்பிலி 6 பங்கு, சீரகம் 8 பங்கு சேர்த்து பொடி செய்து இதனுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட தீராத விக்கல் தீரும்.