தான்றிக்காய் மருத்துவ பயன்கள்
தன்றி மரம் பிரம்மாண்டமான தோற்றம் கொண்டது. 120 அடி வரை வளரும். தண்டின் அடிப் பகுதியின் சுற்றளவு 10 அடிவரை இருக்கும். இதன் இலைகள் கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படும். குறிப்பாகக் கறவை மாடுகளின் பால் பெருக்கத்துக்கு சிறந்த தீவனமாக பயன்படுகிறது. வட மொழியில் தான்றியை ‘விபீதகி’ என்பார்கள். தினந்தோறும் தான்றி உண்டால் நோய் நீங்கும் என்பது இதன் அர்த்தம்.
சிலந்திவிடங் காமியப்புண் சீழான மேகங்
கலந்திவரும் வாதபித்தங் காலோ-டலர்ந்துடலி
லூன்றிக்காய் வெப்ப முதிரபித் துங்கரக்குந்
தான்றிக்காய் கையிலெடுத் தால்.
தான்றிக்காய் மருத்துவ பயன்கள்
இதைக் கர்ஷம், அக்ஷம் என்று குறிப்பிடுவார்கள். இது மஹாவிருக்ஷம் ஆகும். எல்லா இருமலுக்கும், சளிக்கும் இதை முகதாரணம் செய்வதற்குச் சிறந்தது.
கபம் பித்தத்தை இது தணிக்கும். சிறிது உஷ்ண வீர்யம் உடையது. இருமலை மற்றும், கண்ணுக்குச் சிறந்தது.
இதிலிருந்து எடுக்கும் எண்ணெய்க் கூந்தல் வளர்வதற்கு உதவுகிறது. வெல்லத்துடன் சேர்த்துச் சாப்பிட வாதத்தைத் தணிக்கும்.
கொட்டை நீக்கிக் கருகாமல் வறுத்துத் பொடித்து 1 கிராம் அளவு சர்க்கரை கலந்து காலை, மாலை கொடுக்க மலச்சிக்கல், குடல் பலமின்மை, காய்ச்சல், பித்தத் தலைவலி, இரத்தமூலம், சீதபேதி ஆகியவை தீரும்.
தான்றிப் பொடி 3 கிராமுடன் சமன் சர்க்கரை வெந்நீரில் கலந்து காலை மாலை சாப்பிடப் பித்த நோய்கள் வாய்நீர் ஒழுகல் தீர்ந்து, கண் பார்வை தெளிவுறும்.
காயை நீர் விட்டு இழைத்து புண்களில் பூச ஆறும். அக்கியில் பூச எரிச்சல் தனித்து குணமாகும்.