மூலிகைகள்
வெள்ளைப்படுதல், வாத நோய்களை குணமாக்கும் செருப்படை மூலிகை
செருப்படை தரையோடு படரும் செடியினமாகும். இந்தியா முழுவதுமே காணப்படும். சமவெளிகள், தரிசு நிலங்களில் தானே வளரக்கூடியது. செருப்படை இனத்தில் சிறு செருப்படை, பெருஞ்செருப்படை என இருவகை உண்டு. இவற்றில் சிறு செருப்படை மிகுந்த விசேஷ குணமுடையது. இதனை செந்தூர மூலி எனக்கூறுவர்.
செருப்படைக்கு வாதமந்தஞ் சேர்வான மேக
மிருப்படிகொள் பொல்லா இசிவும் – விருப்படிக்குஞ்
சூலையொடு வாதகுன்மந் தோற்ற தொருநாளும்
வேலையொத்த கண்ணாய் விளிம்பு
குணம்
செருப்படைக்கு, வாதகோபம், மந்தாக்கினி, வெள்ளை வீழ்தல், ஆகிருஷ்ண ஸ்தம்பனவாதம், சூலை, குன்மம் இவைகள் நீங்கும்.
செருப்படை மருத்துவ குணங்கள்
சிறு செருப்படை யும், வெள்ளை வெங்காயத்தையும் சம அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து 6-7 தடவை வடிகட்டி தினம் ஒரு வேளை காலையில் 1/2 ஆழாக்கு கொடுக்க பேதியாகும். மேக சொறி, சிரங்கு, வெள்ளைப்படுதல், வாத நோய் முதலியவை குணமாகும்.