உணவே மருந்து
சுண்டக்காய் சாம்பார்
சுண்டக்காய் சாம்பார் செய்முறை
தேவையானவை
- சுண்டக்காய் – 100 கிராம்
- துவரம்பருப்பு – 50 கிராம்
- பாசிப்பருப்பு – 50 கிராம்
- சின்ன வெங்காயம் – 50 கிராம்
- தக்காளி – 2
- பூண்டு – 1
- பச்சை மிளகாய் – 4
- மிளகாய் தூள்
- மல்லித்தூள்
- மஞ்சள் தூள்
- நல்லெண்ணெய்
- சீரகம்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி
செய்முறை
துவரம்பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையும் வேகவைத்துக்கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி, சுண்டக்காய், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு வேகவைத்த பருப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து கொதிக்கவைக்கவும். நன்கு கொதித்தவுடன் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
பயன்கள்
- வயிற்றிலுள்ள கிருமிகளை போக்குகிறது.
- சுண்டைக்காயில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் வாரம் ஒரு முறை சாப்பிடலாம்.
- மூலச்சூடு, மூலக்கடுப்பு, வயிற்றுப்போக்கு தீரும்