செரியாமை, வயிற்றுப்பொருல், தலைவலியை நீக்கும் சுக்கு
திரிகடுக்கில் ஒன்றான சுக்கு எண்ணற்ற மருத்துவ பலன்களை கொண்டது. இதை சுக்கிற்கு மிஞ்சிய மருந்துமில்லை, சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை என்று கடவுளுடன் நம் முன்னோர்கள் ஒப்பிட்டுள்ளனர்.
சூலைமந்த நெஞ்செரிப்பு தோஷமேப் பம்மழலை
மூல மிரைப்பிரும்மன் மூக்கு நீர் – வால கப
தோஷமதி சாரந் தொடர்வாத குன்ம நீர்த்
தோஷமா மம்போக்குஞ் சுக்கு.
சுக்கு மருத்துவ பயன்கள்
சுக்கை அரைத்து லேசாக சூடேற்றி பற்று போடா தலைவலி உடனே குறையும்.
சுக்கு, மிளகு, அதிமதுரம் மூன்றையும் சமமாக எடுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு வெந்நீரில் கலக்கி காலையில் ஒரு வேலை மட்டும் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட முதுகுவலி குணமாகும்.
தேங்காய் பாலுடன் சிறிதளவு சுக்குத்தூள் சேர்த்து சாப்பிட வாய்ப்புண், நாக்குப்புண் ஆகியவை குணமாகும்.
சுக்கு, அதிமதுரம், ஏலக்காய், திப்பிலி ஆகியவற்றை சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி குடித்து வர காய்ச்சல் குணமாகும்.
அரணை கடித்தவர்களுக்கு உடனே சுக்கு, வசம்பு இரண்டையும் சம அளவு சுட்டு பொடியாக்கி வெந்நீரில் கலந்து சாப்பிட அந்த நஞ்சு இறங்கிவிடும்.
ஏலரிசி, சீரகம், சுக்கு, கிராம்பு ஆகியவை சமமாக எடுத்து இடித்து 2 கிராம் அளவாகத் தேனில் நாள் ஒன்றுக்கு 3 வேலை வீதம் சாப்பிட்டு வர செரியாமை , வயிற்றுவலி, வயிற்றுப்பொருமல் ஆகியவை குணமாகும்
குறிப்பு : சுக்கை பயன்படுத்தும் போது அதன் மேல்தோலை நீக்கிவிட்டு பயன்படுத்தவும்.