மூலிகைகள்
சிலந்தி நாயகம் மருத்துவ பயன்கள்
சிலந்தி நாயகம் எதிரடுக்கில் அமைந்த ஈட்டி வடிவ இலைகளையுடைய தரையில் படரும் சிறு செடி. நீலம், வெள்ளை, கருஞ்சிவப்பு நிற மலர்களைக் கொண்டது. வெடித்துச் சிதரக் கூடிய கனிகளையுடையது. இது வெடிக்காய்ச் செடி எனவும் அழைக்கப்பெறும். இலை, பூ, பிஞ்சு ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
சிலந்தி நாயகம் மருத்துவ பயன்கள்
- இலையை நீரின்றி அரைத்து நகச்சுற்றில் கட்டி வர உடைந்து இரத்தம், சீழ், முளையாவும் வெளியேறிக் குணமாகும்.
- இலைச்சாற்றுடன் (1 தேக்கரண்டி ) சம அளவு பாலில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரக் கட்டிகள் வராது தடுக்கும். உள் உறுப்புகளில் உள்ள புற்றுரணங்கள் குணமாகும். இரத்தச் சர்க்கரை குறையும்.
- பூ, பிஞ்சு ஆகியவற்றைப் பன்னீரில் போட்டு அத்துடன் 4 அரிசி எடை பொரித்த படிகாரம் கலந்து 4 மணி நேரம் கழித்து வடிகட்டி 2 துளி ஒரு நாளைக்கு 4 முறை கண்ணில் விட கண்கோளாறு, கண்வலி, பார்வை மங்கல், கண்சிவப்பு, கூச்சம் ஆகியவை தீரும்.