உடலை உறுதியாக்கும் சிறுதானியங்கள்
கம்பு
உடல் வெப்பத்தைத் தணிக்கும். உடல் உறுதி பெரும்.
கேழ்வரகு
தானிய வகைகளில் இதுவும் ஒன்று. இதைக் கொண்டு கூழ் தயாரித்து சாப்பிட இது உடலுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும்.
கொள்ளு
வாதநோயை தணிக்கும். உடலுக்கு வலிமை தரும்.
சாமை அரிசி
இதை சமைத்துச் சாப்பிட்டால் மேகநோய் தணியும்.உடலுக்கு நல்ல பலம் தரும். வாதசம்பந்தமான நோய்களின் வேகத்தை குறைக்கும்.
எள்ளு
கண் பார்வையை தெளிவடையச் செய்யும். கபத்தை உற்பத்திச் செய்யும். பித்தத்தை உபரியாக்கும். உடலுக்கு நல்ல பலத்தைத் தரும்.
கடலைப் பருப்பு
இது மருந்தின் குணத்தை மாற்றிவிடும். உடலுக்குப் பலம் தரும். இலேசான வாயுவையும் பித்தத்தையும் உண்டு பண்ணும்.
ஏலக்காய்
ஏலக்காய், ஏலரிசி இரண்டும் நல்ல வாசனை தருபவை. கபத்தை உடைத்து வெளியேற்றும்.வாயில் ஊறும் உமிழ்நீரைச் சமப்படுத்தும். மலச் சிக்கலைத் தீர்க்கும்.
கடுகு
நல்ல செரிமான சக்தியை உண்டு பண்ணும். உடல் வெப்பத்தை அதிகரிக்கும்.சுவாச சம்பந்தமான நோய்யைத் தணிக்கும்.
கசகசா
சமையல் வகைக்கும் வைத்திய முறைகளுக்கும் கசகசா பயன்படும். சமையல் வகையில் ருசியை அதிகரிக்க கசகசா சேர்ப்பார்கள். மருத்துவ குணத்தில் சீதபேதியை நிறுத்தும். நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்