சளியுடன் கூடிய இருமல், மார்பு சளி, பீனிசம் தீர எளிய வழிமுறைகள்
சளிக்கு ஆரம்பத்திலேயே துளசிச் சாறு 1 தேக்கரண்டி, தூதுவேளைச் சாறு 1 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி கலந்து தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் இரண்டொரு நாளில் குறையும்.
சளியுடன் வரும் இருமலுக்கு கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் மூன்றும் சேர்ந்தது திரிபாலா ஆகும். இவற்றுடன் அதிமதுரம் ஒவ்வொன்றும் 50 கிராம் எடுத்து உலர்த்திப் பொடி செய்து வைத்து கொண்டு வேளைக்கு 1/2 டீஸ்பூன் வீதம் காலை, மாலை உண்டுவர சளி இருமல் குணமாகும்.
சுக்கு, திப்பிலி, சிவதைவேர், கோஷ்டம்,பேரரத்தை, கோரைக்கிழங்கு, அதிமதுரம், சித்தரத்தை இந்த எட்டுச் சரக்கிலும் 10 கிராம் வீதம் வாங்கிச் சூரணமாகச் செய்து வைத்துக் கொண்டு சம எடை சர்க்கரைக் கலந்து மூன்று வேளையும் வேளைக்கு 2 சிட்டிகை அளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்து வர சளி, குத்திருமல் நிற்கும்.
தூதுவேளை இலைச்சாற்றில் சம அளவு நெய் கலந்து பதமுறக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை 5 மி.லி சாப்பிட்டு வர மார்பு சளி தீரும்.
அரை கிராம் மிளகு பொடியுடன் 1 கிராம் வெல்லம் சேர்த்து தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வர பீனிசம் தீரும்