அழகு
வெப்பத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க இயற்கை வழிமுறைகள்
கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் மனிதர்களுக்கு பல சரும பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. சருமமும், முகமும் கருமை நிறமடைதல், சருமம் தடித்து காணப்படுதல் போன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்படும். இவற்றை தடுக்க சில இயற்கை வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.
- எலுமிச்சைச்சாறு, தக்காளிச்சாறு, வெள்ளரிக்காய் சாறு இதில் ஒன்றை சிறிது தேனுடன் கலந்து உடலில் பூசிக்கொள்ளலாம்.
- பப்பாளிப்பழத்தை அரைத்து முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவி வர முகம் நன்கு பொலிவு பெறும்.
- முகம் கருத்திற்கும் இடத்தில் எலுமிச்சைச்சாறு, தக்காளிச்சாறு , தயிர் மூன்றையும் மூன்றையும் கலந்து பூசி 15 நிமிடம் கழித்து கழுவி வர சருமம் பொலிவடையும்.
- வெளியில் செல்வதற்கு முன் தேங்காய் எண்ணையை சிறிது சருமத்தில் தேய்த்து சென்றால் சருமம் பாதிப்படையது.
- அன்னாசிப்பழத்துடன் தேன் கலந்து முகத்தில் பூசி வர முகம் நல்ல பொலிவு பெறும்.
- கோடைகாலங்களில் சோப்பை அதிகம் பயன்படுத்தாமல் அடிக்கடி வெறும் தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.